Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

29 ஆண்டுகளாச்சு உங்களுக்கு..! இந்திய வீரர்களின் அந்த ரெக்கார்டை தொடுவதற்கு..! சாதித்த ஆஸி. ஜோடி

Recommended Video

Ashes 2019 | 29 ஆண்டுகள் கழிச்சு இந்தியர்களின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய ஜோடி- வீடியோ

லீட்ஸ்: ஆஷஸ் 3வது டெஸ்டில், ஆஸ்திரேலியாவின் டிம் பெயின், வார்னர் ஜோடி, இந்திய வீரர்களின் 29 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை சமன் செய்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில், நடக்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட்டை அந்த அணி போராடி டிரா செய்தது.

இரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி, லீட்ஸில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து இளம்புயல் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். விளைவு... ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 179 ரன்களுக்கு சுருண்டது.

ஒற்றை இலக்கம் தான்

ஒற்றை இலக்கம் தான்

2வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பவுலர்களின் அசத்தல் வேகத்தால் ஆடித்தான் போனது. அந்த அணியின் ஜோ டென்லே (12) தவிர மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

அசத்தலான முன்னிலை

அசத்தலான முன்னிலை

இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 67 ரன்களுக்குள் அடங்கியது. 71 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து எடுத்த மகா, மட்டமான ஸ்கோர் இது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 112 என்ற வலுவான முன்னிலை பெற்றது.

அபார கேட்ச்

அபார கேட்ச்

போட்டியில் இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பெயர்ஸ்டோவ் ஆகியோர் அவுட்டாகினர். அவர்களை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.

ஒரே இன்னிங்ஸ்

ஒரே இன்னிங்ஸ்

அதேபோல இங்கிலாந்தின் பர்ன்ஸ், ஜோ டென்லே, ஜானி பேர்ஸ்டோவ், ஜாப்ரா ஆர்சர் ஆகியோரை ஆஸ்திரேலியாவின் டிம் பெயின் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்சில் 2 வீரர்கள் தலா 4 கேட்சுகள் பிடித்தது இது 2வது முறையாகும்.

29 வருடங்கள்

29 வருடங்கள்

முன்னதாக கடந்த 1989 - 1990ல் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவின் கிரண் மோரே, முகமது அசாருதின் ஆகியோர் தலா 4 கேட்ச் பிடித்து அசத்தினர். அந்த சாதனையை கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் கழித்து, ஆஸ்திரேலியாவின் டிம் பெயின், டேவிட் வார்னர் சமன் செய்தனர்.

Story first published: Saturday, August 24, 2019, 8:37 [IST]
Other articles published on Aug 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+