Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்போது என்ன சொல்லுவீங்க.. கெரியரே காலியாக போகிறது.. இந்திய அணியால் ஆஸி. எடுக்க போகும் பரபர முடிவு!

சிட்னி: இந்தியாவிற்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்த காரணத்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவு கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளது. 4-0 என்று இந்தியா வொயிட்வாஷ் ஆகும் என்று பலரும் கணித்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் மட்டுமின்றி டெஸ்ட் தொடர் வரலாற்றில் இது மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்த காரணத்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரிலும் இதேபோல் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா கடுமையாக தோல்வி அடைந்தது.

இல்லை

இல்லை

அப்போதுதான் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக டிம் பெயின் தேர்வானார். உப்புத்தாள் சர்ச்சை காரணமாக ஸ்மித் ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். வார்னரும் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி வலிமையின்றி இருந்தது.

வெற்றி

வெற்றி

இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வென்றது. ஆனால் அப்போது டிம் பெயின் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கோபத்தில் இல்லை.ஸ்மித், வார்னர் இல்லை என்ற காரணத்தால் டிம் பெயின் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடவடிக்கை

நடவடிக்கை

ஆனால் இந்த முறை ஆஸ்திரேலிய அணியில் வார்னர் ஸ்மித் இருவருமே இருந்தனர். அதோடு இந்திய அணியில் கோலி இல்லை. பாதி தொடரில் பும்ரா, ஜடேஜா, ஷமி, அஸ்வின், உமேஷ் போன்ற மூத்த வீரர்களும் இடம்பெறவில்லை. இந்திய அணியில் முக்கிய வீரர்கள் பார்மில் இல்லை .

 பிட்ச் சாதகம்

பிட்ச் சாதகம்

பிட்ச் தொடங்கி பல சர்ச்சைகள் வரை எல்லாம் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருந்தது. ஆனாலும் இந்த தொடரில் இந்தியாவை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்துள்ளது. இதனால் தற்போது டிம் பெயின் சிக்கலில் இருக்கிறார். ஒரு கேப்டனாக இவரின் திட்டமிடல் பெரிய அளவில் சொதப்பி உள்ளது. ஒரு வீரராகவும் இவர் சரியாக ஆடவில்லை.

மோசம்

மோசம்

கீப்பராகவும் இவர் சரியாக செயல்படவில்லை. டாப் வீரர்கள் அணியில் இருந்துக் கூட இவரால் ஆஸ்திரேலிய அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை. இதனால் இவரை கேப்டன்சியில் இருந்து நீக்கும் திட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உள்ளது என்கிறார்கள். மீண்டும் ஸ்மித்திற்கு கேப்டன்சியை கொடுக்கும் எண்ணத்தில் ஆஸ்திரலிய கிரிக்கெட் வாரியம் உள்ளது.

ஆலோசனை

ஆலோசனை

இன்னும் சில வாரங்களில் தென்னாப்பிரிக்க தொடரில் ஆஸ்திரேலியா ஆடும். அதன்பின் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா ஆடும். இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கு பின் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து டிம் பெயின் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, January 20, 2021, 11:41 [IST]
Other articles published on Jan 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+