Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட நன்றாக இல்லை.. உடனே கேப்டனை நீக்குங்கள்.. 3வது டெஸ்டுக்கு பின் விளாசிய கவாஸ்கர்!

சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயினை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது. மிகவும் பரபரப்பாக சென்ற ஆட்டத்தை இந்திய வீரர்கள் கஷ்டப்பட்டு டிரா செய்தனர்.

இந்தியாவிற்கு எதிரான இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் இந்திய வீரர்களை தனது வார்த்தைகள் மூலம் தொடர்ந்து சீண்டி வந்தார்.

சீண்டினார்

சீண்டினார்

முக்கியமான அஸ்வினை டிம் பெயின் தொடர்ந்து சீண்டி வந்தார். அடுத்த போட்டிக்கு ரெடியாக்குங்கள் என்று கிண்டல் செய்ய தொடங்கியவர் ஐபிஎல்லில் உங்களை யாருக்குமே பிடிக்காதாமே உண்மையா என்று கேட்டார். விஹாரியையும் டிம் பெயின் விடாமல் சீண்டி வந்தார்.

நீக்கம்

நீக்கம்

இந்தநிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயினை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்தில், ஒரு கேப்டன் என்பவர் நேர்மையாக செயல்பட வேண்டும்.

கேப்டன்

கேப்டன்

அணியை வழி நடத்துவது போல கேப்டன் செயல்பட வேண்டும். ஆனால் டிம் பெயின் அப்படி செயல்படவியில்லை.அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரின் ஆட்டம் கொஞ்சம் கூட கவரும் வகையில் இல்லை. அவரின் செயல்பாடு அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. அவர் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மோசமான தலைமை

மோசமான தலைமை

டிம் பெயின் தான் பேசுவதை குறைத்துக் கொண்டு கேட்ச் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் அவர் இன்னும் நன்றாக கீப்பிங் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு இந்திய வீரர்களை அவர் தேவையின்றி சீண்ட கூடாது, என்று சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, January 12, 2021, 13:21 [IST]
Other articles published on Jan 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+