Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு எதிரான டி 20 தொடர்.. கேப்டனை மாற்றி கிரிக்கெட் வாரியம்..! மூத்த வீரர் அதிரடி நியமனம்!

வெலிங்டன்: நியூசிலாந்து கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் நீக்கப் பட்டு அந்த அணியின் டி 20 அணிக்கு மட்டும் டிம் சவுதி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தோல்வியை சந்தித்தது.

வில்லியம்சனுக்கு ஓய்வு

வில்லியம்சனுக்கு ஓய்வு

டெஸ்ட் முடிந்த பிறகு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. டி 20 கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வேகப்பந்து வீச்சாளர் சவுதி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக டிம் சவுதி நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

டிம் சவுதி கேப்டன்

டிம் சவுதி கேப்டன்

3 அணிக்கு கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டி20 அணிக்கு மட்டும் டிம் சவுதி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 2020ம் ஆண்டு நடைபெறும் டி 20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்த நியமனம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

யார்? யார்?

யார்? யார்?

நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்: 20 அணி: டிம் சவுதி (கேப்டன்), டாட் ஆஸ்டல், டாம் புரூஸ், கொலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குசன், மார்ட்டின் குப்டில், ஸ்காட் குகலீஜ்ன், டேரில் மிட்செல், கொலின் மன்ரோ, சேத் ரான்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் சீபர்ட் , இஷ் சோதி, ரோஸ் டெய்லர்.

விதி முரண்

விதி முரண்

முன்னதாக, இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அப்போது நியூசிலாந்து கேப்டனான கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ஓவர்கள் வீசினார். ஐசிசி விதிமுறைக்கு முரண்பட்டு பந்து வீசியதாக புகார் கூறப்பட்டது.

Story first published: Wednesday, August 21, 2019, 12:01 [IST]
Other articles published on Aug 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+