Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன ஒரு பெருந்தன்மை.. நினைவுப்பொருளை 8 வயது சிறுமிக்காக ஏலம் விட்ட சவுத்தி.. குவியும் பாராட்டுக்கள்

நியூசிலாந்து: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அணிந்திருந்த ஜெர்சியை வைத்து டிம் சவுத்தி செய்துள்ள காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.

இதனையடுத்து கோப்பையுடன் நாடு திரும்பிய நியூசிலாந்து வீரர்கள் வெற்றியை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அசத்தல் பவுலிங்

அசத்தல் பவுலிங்

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஒரே ஒரு விக்கெட்டை எடுத்து ஏமாற்றிய டிம் சவுத்தி, 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

புதிய முன்னெடுப்பு

புதிய முன்னெடுப்பு

இவர் தற்போது 8 வயது சிறுமிக்காக புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளார். நியூசிலாந்தைச் சேர்ந்த ஹோலி பேட்டி என்ற சிறுமி, அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமிக்கு உதவ முன்வந்த டிம் சவுத்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றபோது தாம் அணிந்திருந்த ஜெர்சியை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளார்.

இன்ஸ்டா பதிவு

இன்ஸ்டா பதிவு

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சவுத்தியின் ஜெர்சியில் நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் ஆட்டோ கிராப் போட்டுள்ளனர். கேப்ஷனில், எனது குடும்பத்தினருக்கு முதலில் ஹோலியின் கதை பற்றி தெரியவந்தது. அவர்களின் கதையை கேட்டு நான் மிகுந்த வேதனையடைந்தேன். ஹோலிக்கு இன்னும் மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படுவதால் எனது ஜெர்சியை ஏலத்தில் கேளுங்கள். நேரடியாக உதவ விரும்புபவர்கள், வங்கிக்கணக்கு மூலம் உதவி செய்யுங்கள் எனத்தெரிவித்துள்ளார்.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற முக்கிய போட்டிகளில் அணிந்திருந்த ஜெர்ஸிகள் வீரர்களுக்கு மிகவும் நெருக்கமானதாகும். அதனை 8 வயது குழந்தையின் சிகிச்சைக்காக சவுத்தி ஏலத்தில் விட்டிருப்பது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதே குழந்தைக்காக கடந்தாண்டு நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்டின் கப்தில் தனது பேட்டை ஏலத்தில் விட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 30, 2021, 8:27 [IST]
Other articles published on Jun 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+