Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிராக தீயாய் பந்து வீசி 7 விக்கெட்டுகளை சாய்த்த டிம் சவுத்தி...உலக கோப்பையில் சாதனை

வெலிங்டன்: நியூசிலாந்தின் டிம் சவுத்தி உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக சென்று அமர்ந்துள்ளார். இதன்மூலம் முந்தைய சாதனையாளர்களை அவர் சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியின்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி 9 ஓவர்களில் 33 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை 123 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆக உதவினார்.

சாதனை சமன்

சாதனை சமன்

உலக கோப்பை வரலாற்றில் இதுவரை மூன்று பேர் மட்டுமே ஒரே மேட்சில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அந்த சாதனைக்காரர்களுக்கு மத்தியில் டிம்சவுத்தியும் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார்.

மே.இ.தீவு வீரர் முதல் சாதனை

மே.இ.தீவு வீரர் முதல் சாதனை

முதல் முறையாக 7 விக்கெட் சாதனை 1983ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின்போது நடந்தது. மே.இ.தீவுகளின் வின்ட்சன் டேவிஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10.3 ஓவர்களில் (அப்போதெல்லாம் மொத்தம் 60 ஓவர்கள் என்பதால், ஒரு பவுலர் 12 ஓவர்கள் வீச அனுமதி உண்டு) 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆன்டி பிச்சல்

ஆன்டி பிச்சல்

இதன்பிறகு 2003 உலக கோப்பையின்போது ஆஸ்திரேலியாவின் ஆன்டி பிச்சல் இங்கிலாந்துக்கு எதிராக 10 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மெக்ராத்

மெக்ராத்

2003 உலக கோப்பையில் பிச்சல் சாதனையை மற்றொரு ஆஸ்திரேலிய பவுலரான கிளென் மெக்ராத் சமன் செய்தார். நமீபியா அணிக்கு எதிராக 15 7 ஓவர்களில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மெக்ராத்.

ஜஸ்ட் மிஸ்

ஜஸ்ட் மிஸ்

நடப்பு 2015 உலக கோப்பையில், இன்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டிம் சவுத்தி 9 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கூடுதலாக ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும், புது சாதனை உருவாகியிருக்கும்.

நியூசிலாந்தில் இவர்தான் டாப்

நியூசிலாந்தில் இவர்தான் டாப்

அதே நேரம் ஒரே போட்டியில் அதிக விக்கெட் எடுத்த நியூசிலாந்து பந்து வீச்சாளர்களில் டிம்சவுத்திக்குதான் முதல் இடம். அந்த அணியின் அதிவேக பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் 2003 உலக கோப்பையின்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 23 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரையிலான சாதனையாக இருந்தது. (அந்த போட்டியிலும் ஆஸ்திரேலியாதான் வெற்றி பெற்றது தனிக்கதை).

Story first published: Friday, February 20, 2015, 10:07 [IST]
Other articles published on Feb 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+