Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ளீஸ்...! அவரை விட்டுங்க..! எப்படியாவது எங்கிட்டே கொடுத்துடுங்க.. ஒரு வீரர், மோதும் 2 நாடுகள்

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீசின் ஜோப்ரா ஆர்ச்சரை மீண்டும் எங்களுக்கே கொடுத்து விடுமாறு அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் டினோ பெஸ்ட் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பார்படாசில் பிறந்த ஜோப்ரா ஆர்ச்சரின் தாய் வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர். தந்தையின் தாய்நாடு இங்கிலாந்து. அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடுவதற்கு பதிலாக இங்கிலாந்து அணியில் விளையாடவே விருப்பம் கொண்டார் ஆர்ச்சர்.

அவருக்கு முன்பு வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் ஜார்டன், பிறகு இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். அவர்தான் ஆர்ச்சருக்கு பெரிய ஊக்கமாக அமைந்தார். 2013ம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்தார் ஆர்ச்சர்.

திருப்புமுனை ஜார்டன்

திருப்புமுனை ஜார்டன்

பிறகு காயம் காரணமாக, அவரால் பார்படாஸ் அணியில் நீடிக்கமுடியவில்லை. பெரிய ஆதரவு இல்லாததால், அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கிறிஸ் ஜார்டன்.பார்படாஸ் அணி வலைப்பயிற்சியில் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை கண்ட ஜார்டன், இங்கிலாந்து கவுண்டி அணியான சசெக்ஸ் நிர்வாகத்தினரிடம் ஆர்ச்சரை பற்றி கூறினார்.

சசெக்ஸ் அணி

சசெக்ஸ் அணி

இதையடுத்து சசெக்ஸ் அணியில் ஆர்ச்சர் இடம் பிடித்தார். 2016ல் அந்த அணிக்காக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினார். ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ், பங்களாதேஷ் பிரிமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என முக்கியமான டி20 போட்டிகளில் விளையாடினார்.

ஐபிஎல் அசத்தல்

ஐபிஎல் அசத்தல்

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். ஏலத்தில், ஜோப்ரா ஆர்ச்சரை ரூ. 7.20 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி. எந்தவொரு சர்வதேச ஆட்டத்திலும் விளையாடாத டி20 லீக் போட்டிகளிலும் கவுன்டி போட்டிகளிலும் விளையாடியே புகழ்பெற்ற ஆர்ச்சரை உலக கோப்பைக்கு தேர்வு செய்தது இங்கிலாந்து.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

கடைசியில் அந்த அணி உலக கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார். தற்போது, இங்கிலாந்து டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளில் இடம்பிடித்துள்ளார். நேற்று டிரா ஆன லார்ட்ஸ் டெஸ்டில் மொத்தமாக 5 விக்கெட்டுகள் எடுத்து அதிகக் கவனம் ஈர்த்துள்ளார் ஆர்ச்சர்.

வினோத கோரிக்கை

வினோத கோரிக்கை

இங்கிலாந்து அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்வதற்கு இவர் முக்கியக் காரணமாக இருக்கப் போகிறார் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் வீரர் டினோ பெஸ்ட், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

டுவிட்டர் பதிவு

ட்விட்டரில் அவர் கூறியதாவது: கிரிக்கெட் வாரியமும் பார்படாஸ் கிரிக்கெட் சங்கமும் இணைந்து விரைவாக நடவடிக்கைகள் எடுத்து ஆர்ச்சர் போன்ற வீரர்களை வருங்காலத்தில் இழக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வெஸ்ட் இண்டீஸ் ஜெர்சியை அவர் அணியவில்லை என்பது அதிர்ச்சி என்று கூறி இருக்கிறார்.

Story first published: Monday, August 19, 2019, 18:02 [IST]
Other articles published on Aug 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+