Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டுல 50% ரசிகர்களுக்கு தமிழக அரசு அனுமதி... சேப்பாக்கத்துல போட்டிய பாக்க ரெடியா மக்களே?

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகளில் 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ திட்டமிட்ட நிலையில், கொரோனா பீதி காரணமாக தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விளையாட்டு நிகழ்ச்சிகளில் 50% பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சேப்பாக்கத்தில் 2 போட்டிகள்

சேப்பாக்கத்தில் 2 போட்டிகள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 5 மற்றும் 13 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெறவுள்ளது. முன்னதாக இந்த போட்டிகளில் 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ திட்டமிட்டு ஆலோசனை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பீதி காரணமாக தமிழக அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது.

முதலமைச்சர் அறிக்கை

முதலமைச்சர் அறிக்கை

இந்நிலையில இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு அனுமதி?

ரசிகர்களுக்கு அனுமதி?

இதையடுத்து வரும் 5ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா -இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தமிழக கிரிக்கெட் சங்கம் பார்வையாளர்களை அனுமதிக்கும்பட்சத்தில் கோவிட் பரவலுக்கு பிறகு ரசிகர்கள் லைவ் மேட்சில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள்

அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள்

சர்வதேச அளவில் லைவ் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான போட்டிகளிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அகமதாபாத்தில் நடத்தப்பட உள்ள இறுதி 2 டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு கவனம பெற்றுள்ளது.

Story first published: Sunday, January 31, 2021, 18:03 [IST]
Other articles published on Jan 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+