Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரைப்படமாகும் கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை..ஹீரோவாக நடிக்கும் சுட்டீஸ்க்கு பிடித்த நட்சத்திரம்

சென்னை: பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் சினிமாவில் பவ்வேறு விளையாட்டு வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல லரவேற்பை பெற்றுள்ளது.

சாதாரண கிராமத்தில் பிறந்த உலககோப்பையை வென்ற தோனியின் கதை, பல்வேறு இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக இருந்தது.

சாதனை கதை

சாதனை கதை

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை திரைப்படமாக இதுவரை பெரிய அளவில் வந்தது இல்லை. தற்போது முதல் முயற்சியாக தமிழகத்தில் இருந்து பல தடைகளை உடைத்து, இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நடராஜனின் கதை தற்போது படமாக்கப்படுகிறது.

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு

நடராஜனின் தந்தை நெசவு தொழிலாளி, தாய் சிறிய அளவில் ஹோட்டல் நடத்தி வந்தவர். உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி, பிறகு நண்பனின் உதவியால் சென்னைக்கு வந்து, அங்கு டிவிசன் கிரிக்கெட் பிறகு டி.என்.பிஎல், ஐபிஎல் என நடராஜன் தன் வாழ்க்கையில் உழைப்பால் உயர்ந்தார்.

இளைஞர்களுக்கு உதவி

இளைஞர்களுக்கு உதவி

டேவிட் வார்னரின் செல்லப் பிள்ளை போல் மாறிய நடராஜன், அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறினார். தற்போது ஐபிஎல் மூலம் கோடிக் கணக்கில் ஊதியம் பெற்ற நடராஜன், தம்மை போல் மற்றவர்களுக்கு துன்ப படக்கூடாது என்பதற்காக சேலத்தில் கிரிக்கெட் அகாடமியை உருவாக்கி மற்ற இளைஞர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

பிரபல நடிகர்

பிரபல நடிகர்

தற்போது நடராஜனின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் கனா போன்ற படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராகவும் , எதிர் நீச்சல் படத்தில் மாரத்தான் ஓட்டப் பந்தய வீரராகவும் நடித்து இருக்கிறார். சிவகார்த்திகேயன், நடராஜன் வாழ்க்கை திரைப்படத்தில் நடித்தால், அது இன்னும் பெரிய அளவில் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 11, 2022, 18:46 [IST]
Other articles published on Oct 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+