Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நாயகன் மீண்டும் வரார்..” தமிழக வீரர் டி.நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு.. எங்கு? எப்போது தெரியுமா??

மும்பை: தமிழக கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி.நடராஜன் கம்பேக் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் தற்போது டி20 உலகக்கோப்பை தொடரை வெல்வது மீது உள்ளது.

இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டதால், அதுகுறித்த விவாதங்கள் பரபரப்பாக போய்கொண்டிருக்கின்றன.

தமிழக வீரர்களின் சூழல்

தமிழக வீரர்களின் சூழல்

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2 சீனியர் வீரர்கள் அணிக்குள் கம்பேக் தந்து வரும் சூழலில், இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி.நடராஜன் ஆகியோர் மட்டும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர்.

இந்திய அணியில் புறக்கணிப்பு

இந்திய அணியில் புறக்கணிப்பு

யார்க்கர் நாயகன் டி.நடராஜன் கடந்த 2 ஆண்டுகளாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். தனது திறமையை நிரூபிக்க, கடந்த ஐபிஎல்-ல் கம்பேக் தந்த போதும், அடிக்கடி காயம் ஏற்பட்டது. இதே போல வாஷிங்டன் சுந்தருக்கும் அடிக்கடி காயம் ஏற்பட்டுவிடுவதால் இந்திய அணியில் பரிந்துரை கூட செய்ய முடியாத அளவிற்கு உள்ளனர்.

மெகா ஜாக்பாட்

மெகா ஜாக்பாட்

இந்நிலையில் இவர்களுக்கு பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவின் பிரபல உள்நாட்டு தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடுவதற்கான தமிழக அணியில் இவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர். இதில் வாஷிங்டன் சுந்தர் துணை கேப்டனாகவும், நடராஜன் முதன்மை வேகப்பந்துவீச்சாளராகவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

பலன் என்ன?

பலன் என்ன?

சையது முஷ்டாக் அலி கோப்பை வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாடும் வீரர்களை, பிசிசிஐ தேர்வுக்குழு நேரடியாக கவனிக்கும். எனவே இதில் ஒருவேளை சிறப்பாக விளையாடிவிட்டால் நடராஜன், சுந்தர் இருவரும் மீண்டும் இந்திய அணிக்குள் என்ட்ரி கொடுக்கலாம்.

Story first published: Friday, September 16, 2022, 17:25 [IST]
Other articles published on Sep 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+