For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி பந்தில் சிக்ஸ்.. உடைந்து போன தமிழ்நாடு அணி.. SMAT தொடரில் வெற்றியைப் பறித்த டெல்லி

அகமதாபாத்: 2025 சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் கடைசி பந்து வரை சென்ற மிகவும் பரபரப்பான ஆட்டத்தில், தமிழக அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. யஷ் துல்லின் அதிரடி அரைசதமும், கடைசி பந்தில் ஹிம்மத் சிங் அடித்த சிக்ஸரும் டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டன.

குரூப் டி பிரிவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டெல்லி மற்றும் தமிழ்நாடு அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது.

TN vs Delhi SMAT 2025 Karthik s Sixer on Last Ball Delhi Snatch Victory from Tamil Nadu in Thrilling Finish

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு திரும்பிய நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் 10 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

தமிழக அணியின் துவக்க வீரர்கள் துஷார் ரஹேஜா 72 ரன்கள் மற்றும் அமித் சாத்விக் 54 ரன்கள் சேர்த்து டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். துஷார் 41 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 72 ரன்களும், அமித் சாத்விக் 40 பந்துகளில் 54 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது. கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், தமிழக அணி 198 ரன்களை எட்டியது. டெல்லி தரப்பில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

199 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி டெல்லி களமிறங்கியது. அந்த அணியின் இளம் வீரர் யஷ் துல் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். தமிழக பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், 46 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். இவருக்குத் துணையாக பிரியன்ஷ் ஆர்யா 35, கேப்டன் நிதிஷ் ராணா 34 ஆகியோர் ரன் சேர்த்தனர்.

குறிப்பாக ஆயுஷ் பதோனி 23 பந்துகளில் 41 ரன்கள் விளாசி ஆட்டத்தை டெல்லி பக்கம் திருப்பினார். ஆனால் முக்கியமான நேரத்தில் நடராஜன் பந்துவீச்சில் யஷ் துல்லும், சோனு யாதவ் பந்துவீச்சில் ஆயுஷ் பதோனியும் ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் கடைசி பந்து வரை சென்றது. கடைசி ஒரு பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், களத்தில் இருந்த ஹிம்மத் சிங் சிக்ஸர் விளாசி டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தார். அப்போது எல்லைக் கோட்டில் நின்று இருந்த தமிழக வீரர் பந்தை கையில் தொட்டாலும் அவரால் கேட்ச் பிடிக்கமுடியவில்லை.

கையில் இருந்த வெற்றியை கடைசி பந்தில் கோட்டைவிட்ட தமிழக வீரர்கள் மைதானத்தில் சோகத்துடன் நின்றனர். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Story first published: Friday, November 28, 2025, 18:50 [IST]
Other articles published on Nov 28, 2025
English summary
TN vs Delhi SMAT 2025: Karthik's Sixer on Last Ball! Delhi Snatch Victory from Tamil Nadu in Thrilling Finish
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+