Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை 2வது டெஸ்ட்: இனவெறி, மதவெறி கூடாது - ரசிகர்களுக்கு டிஎன்சிஏ எச்சரிக்கை

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. இங்கிலாந்து இதில் வெற்றிப் பெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில், வருகிற 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதன்படி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 15 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக டிக்கெட் விற்பனை வருகிற இன்று (பிப்.9) ஆன்லைனில் தொடங்கியது. இந்நிலையில், ரசிகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

 சளி இருந்தா அப்படியே போயிடவும்

சளி இருந்தா அப்படியே போயிடவும்

வாய் மற்றும் மூக்கை கவர் செய்து முகக்கவசம் அணிவது முக்கியம். எல்லா நேரமும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயம். காய்ச்சல், இருமல், சளி போன்ற COVID 19 அறிகுறி தென்படும் நபர்களுக்கு அரங்கத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.

 எதற்கும் அனுமதி இல்லை

எதற்கும் அனுமதி இல்லை

பைகள், ஜோல்னா பை, பெட்டிகள், ரேடியோக்கள், லேசர் பாயிண்டர்ஸ், டிஜிட்டல் டைரிகள், மடிக்கணினிகள், கணினிகள், டேப் ரெக்கார்டர்கள், பதிவு செய்யும் சாதனங்கள், தொலைநோக்கிகள், தொலை கட்டுப்பாட்டு சாதனங்கள், எரியக்கூடிய பொருள், இசைக்கருவிகள், வீடியோ கேமராக்கள், பட்டாசுகள், உணவு மற்றும் பானம், பாட்டில்கள் அல்லது ஆயுதமாக பயன்படுத்தக்கூடிய எந்தவொரு பொருளுக்கும் அனுமதி கிடையாது

 நோ பதாகைகள்

நோ பதாகைகள்

வணிக விளம்பரம் சார்ந்த விஷயம், காப்புரிமை பெற்ற வணிக சின்னங்களை காண்பிக்கும் பதாகைகள் மற்றும் கொடிகள், அதிகாரப்பூர்வ ஸ்பான்ஸர்களின் உரிமைகளுடனும் முரண்படக்கூடும் எந்தவொரு விஷயத்துக்கும் அனுமதி கிடையாது. புகைபிடித்தல், ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் போன்ற சட்டவிரோத பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

 சட்டத்தின் படி நடவடிக்கை

சட்டத்தின் படி நடவடிக்கை

இனவெறி, மத அல்லது அரசியல் நடவடிக்கைகள், அரங்கத்திற்குள் தவறான / மோசமான செயல்களில் ஈடுபடும் பார்வையாளர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள், இது விளையாட்டைத் தொந்தரவு செய்யக்கூடும், மேலும் இதுபோன்ற நபர்கள் சட்டத்தின் படி கையாளப்படுவார்கள்.

 காவல்துறை நடவடிக்கை

காவல்துறை நடவடிக்கை

பார்வையாளர்கள் தங்கள் உடமைகளை எந்தவொரு பாதுகாப்புக் காவலர் / அதிகாரிகள் அல்லது பிற பணியாளர்களிடமும் ஒப்படைக்க கூடாது. தேசிய கொடிகள் அல்லது தேசிய சின்னங்களை அவமதிக்க வேண்டாம் என்று பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு கண்டறியப்பட்டால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, February 9, 2021, 13:43 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+