2வது டெஸ்ட்டுல ரசிகர்களை அனுமதிங்க ப்ளீஸ்.. பிசிசிஐயிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கோரிக்கை
சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் வரும் 5 மற்றும் 13 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெறவுள்ளது.
இந்த இரு போட்டிகளில் 50 சதவிகித ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ திட்டமிட்ட நிலையில் அதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது.
தற்போது 50 சதவிகித பார்வையாளர்களை விளையாட்டு போட்டிகளில் அனுமதிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், வரும் 2வது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களை அனுமதிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பிசிசிஐயிடம் இன்றைய தினம் கோரிக்கை விடுக்க உள்ளது.

5, 13 தேதிகளில் துவங்கவுள்ளது
இந்தியா -இங்கிலாந்து இடையிலான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் வரும் 5ம் தேதி மற்றும் 13 ஆகிய தேதிகள் துவங்கி நடைபெறவுள்ளன. இந்த போட்டிகள் ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்க மேற்கொண்ட பிசிசிஐயின் முயற்சிக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

பிசிசிஐயிடம் கோரிக்கை
இந்நிலையில் விளையாட்டு போட்டிகளில் 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து வரும் 13ம் தேதி துவங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயிடம் கோரிக்கை விடுக்க உள்ளது.

50% பார்வையாளர்கள்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்எஸ் ராமசாமி இன்றைய தினம் இதுகுறித்துபிசிசிஐயிடம் கோரிக்கை மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ அனுமதி கிடைக்கும்பட்சத்தில் தழிழக அரசின் உத்தரவின்படி 50 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு அனுமதி
வரும் 5ம் தேதி துவங்கி 17ம் தேதிவரை சென்னை சிதம்பரம் மைதானத்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் ஆட திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த போட்டிகளில் முன்னதாக ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரசிகர்களை அனுமதிக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications