Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-க்கு நிகரான பரபரப்பு.. டிஎன்பிஎல் முதலாவது ப்ளே ஆப்..இறுதிப்போட்டிக்கு முன்னேறிய திருச்சி அணி

சென்னை: டிஎன்பிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்றுப்போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Recommended Video

TNPL 2021: Trichy Enters Final! Chepauk lost in Qualifier 1 | CSG vs RTW | OneIndia Tamil

ஐபிஎல் தொடரை போல, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்டு தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2016ல் தொடங்கப்பட்ட டிஎன்பிஎல் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறையும், டூட்டி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

இந்தாண்டுக்கான தொடர் கடந்த ஜூலை 19ம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ப்ளே ஆஃப் சுற்று

ப்ளே ஆஃப் சுற்று

8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், லீக் சுற்று முடிவில் திருச்சி வாரியர்ஸ் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 3-வது இடத்தையும், கோவை கிங்ஸ் 4-வது இடத்தையும் பிடித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் சம அளவிலான புள்ளிகள் பெற்றாலும், ரன்ரேட் அடிப்படையில் கோவை கிங்ஸ் அணி பிளே-ஆஃப்-க்கு முன்னேறியது.

டாஸ்

டாஸ்

இந்நிலையில் ப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 2 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை குவித்தது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

ஓப்பனிங் வீரரும் கேப்டனுமான கௌசிக் காந்தி 1 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான விக்கெட் கீப்பர் ஜகதீசன் 14 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதனால் தொடக்கத்திலேயே சரிவை சந்தித்த அந்த அணியை ராதாகிருஷ்ணன் மீட்டார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய அவர் சிறப்பாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

டார்கெட்

டார்கெட்

54 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 82 ரன்களை விளாசினார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த சசிதேவ் 23 ரன்கள் அடித்தார். பின்னர் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சதிஷ் (29*) கடைசி நேரத்தில் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 153 ரன்களை எடுத்தது.

தொடக்கம்

தொடக்கம்

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் கில்லிஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் சந்தோஷ் ஷிவ் 5 ரன்களுக்கும், அமித் சாத்விக் 9 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். இதன் பின்னர் முகமது கானும் 4 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் 44 ரன்களுக்கு அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ட்விஸ்ட்

ட்விஸ்ட்

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ் ராஜகோபால் - ஆதித்யா கணேஷ் ஆகியோர் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தி கொண்டு சென்றனர். முதலில் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்த அவர்கள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினர். சிறப்பாக விளையாடிய ராஜகோபால் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 55 ரன்களை விளாசினார்.

அபார வெற்றி

அபார வெற்றி

ஆட்டம் கடைசி கட்டத்தை எட்டியபோது சிறப்பாக விளையாடி வந்த நிதிஷ் ராஜகோபால் திடீரென ரன் அவுட்டானார். அவருக்கு அடுத்து வந்த சித்தார்த்தும் 3 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவர் வரை சென்று 5 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை உருவானது. ஆதித்ய கணேஷ் கடைசி நேரத்தில் சிக்ஸர் அடிக்க 19.5 ஓவர்களில் திருச்சி வாரியர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆதித்யா 66 ரன்களை விளாசினார்.

Story first published: Wednesday, August 11, 2021, 8:03 [IST]
Other articles published on Aug 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+