Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சீறியது காரைக்குடி காளை... சுருண்டது மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ்!

சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 லீக் தொடரில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை வீழ்த்தியது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 லீக் தொடரின் 16-வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் காரைக்குடி காளை - மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

TNPL 2016: Kaalai thump Giants by 52 runs

டாஸ் வென்ற கரைக்குடி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ராஜ்குமார் 19 பந்தில் தலா நான்கு பவுண்டரி, நான்கு சிக்சருடன் 46 ரன்கள் விளாச, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.

பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் சந்திரனை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, மதுரை அணி 16.1 ஓவர்களை மட்டுமே சந்தித்து 97 ரன்னில் சுருண்டது. இதனால் காரைக்குடி அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மதுரை அணியில் சந்திரன் அதிகபட்சமாக 43 ரன்கள் சேர்த்தார். மேலும், அந்த அணியின் அருண் கார்த்திக் (13), பிரான்சிஸ் ரோகின்ஸ் (10) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். காரைக்குடி காளை அணி தரப்பில் ராஜ்குமார் 4 விக்கெட்டும், மோகன் பிரசாத் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

Story first published: Wednesday, September 7, 2016, 3:39 [IST]
Other articles published on Sep 7, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+