For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிஎன்பில் தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட்... கோவை கிங்ஸ் வீரர் சிவகுமார் சாதனை!

சென்னை: டிஎன்பிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து கோவை கிங்ஸ் அணி வீரர் சிவக்குமார் சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாஸ் அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணியின் துவக்க வீரர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடினார். ஆனால், மற்ற வீரர்கள் கோவை அணி சீரான இடைவேளையில் விக்கெட்டை பறிகொடுத்து 95 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் வாஷிங்டன் சுந்தர் 48 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

TNPL 2016: 's hat-trick hands Lyca Kovai Kings victory

சிறப்பாக பந்து வீசிய கோவை கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் சிவகுமார் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். டிஎன்பில் தொடரி18-வது ஓவரை வந்த சிவகுமார் தூத்துக்குடி அணிக்கு ஷாக் அளித்தார். அந்த ஓவரின் 2-வது பந்தில் மாருதி ராகவ் 12 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த பந்தில் வாஷிங்கடன் சுந்தர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹாட்ரிக் விக்கெட்டை எதிர்பார்த்து வீசிய 4-வது பந்து ஆகாஷை கிளின் போல்டு ஆக்கியது. டிஎன்பில் தொடரில் எடுக்கும் முதல் ஹாட்ரிக் விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. 3.5 ஓவர்கள் வீசிய அவர் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணி 12.5 ஓவர்களில் கோவை இலக்கை எட்டியது. இதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

Story first published: Thursday, September 1, 2016, 18:34 [IST]
Other articles published on Sep 1, 2016
English summary
Lyca Kovai Kings cantered to a 9-wicket win over the Albert Tuti Patriots in their Tamil Nadu Premier League (TNPL) Twenty20 game on Wednesday (August 31) at the MA Chidambaram Stadium. Kings' medium-pacer, MK Siva Kumar, took the first hat-trick of the tournament and finished with excellent figures of 3 for 10 in 3.5 overs.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+