காலை மாற்றி.. பந்தை தூக்கிப் போட்டு வித்தை காட்டிய அஸ்வின்.. இந்த பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா?
Recommended Video
நத்தம் : 2019 டிஎன்பிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே அஸ்வின் தன் விசித்திரத்தை தொடங்கி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் மன்கட் செய்து கிரிக்கெட் உலகையே தன்னை திரும்பிப் பார்க்க வைத்த அஸ்வின், டிஎன்பிஎல் தொடரில் விசித்திரமான பந்துவீச்சை முயற்சி செய்து, "என்ன பண்றாரு இவரு?" என தலையை சொறிய வைத்திருக்கிறார்.

முதல் போட்டி
டிஎன்பிஎல் தொடரில் அஸ்வின் கேப்டனாக இருக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சொதப்பலாக ஆடி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அஸ்வின் அதிரடி
அந்த அணியில் அஸ்வின் மட்டுமே அதிரடியாக ஆடி 19 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அஸ்வின் பேட்டிங்கில் மூன்றாம் வரிசையில் களமிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சு எப்படி?
அஸ்வினை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசினார்கள். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் இரண்டு ஓவர்களிலேயே மூன்று விக்கெட்கள் எடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை திக்கு முக்காட வைத்தது. சிலம்பரசன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

திடீர் முயற்சி
அஸ்வின் 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தாமல் தன் பந்துவீச்சை முடித்துக் கொண்டார். போட்டியின் கடைசி ஓவரை வீசினார் அஸ்வின். சேப்பாக் அணி தோல்வி அடைவது உறுதி என்ற நிலையில் 9 விக்கெட்கள் இழந்து ஆடி வந்தது. அப்போது விக்கெட் வீழ்த்த பகீரத முயற்சி செய்தார் அஸ்வின்.
காலை மாற்றி..
வழக்கமாக வீசுவது போல இல்லாமல், ஓடி வந்த நிலையில், பந்தை அப்படியே கையில் இருந்து தூக்கி வீசினார் அஸ்வின். இடது காலை கிரீஸில் வைத்து, இடது கையை மேலே தூக்கி தான் சுழற் பந்து வீசுவார் அஸ்வின். ஆனால், இப்போது சிறுவர்கள் கிரிக்கெட் போல பந்தை நேராக ஸ்டம்ப்பை பார்த்து வீசினார்.

ஏமாற்றம்
ஆனால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பந்து பேட்ஸ்மேன் இந்த விசித்திர பந்துவீச்சை கண்டு மிரண்டாலும், பந்து வைடாக சென்றது. எப்படியாவது விக்கெட் எடுத்து விட வேண்டும் என்ற அஸ்வினின் முயற்சி தோல்வியில் முடிந்தது.


Click it and Unblock the Notifications