Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாதி திண்டுக்கல்லை அள்ளிய பெரியசாமி.. டிஎன்பிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கிய சேப்பாக்!

சென்னை : 2019 டிஎன்பிஎல் தொடரின் சாம்பியன் பட்டம் வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். கேப்டன் அஸ்வின் இல்லாமல் ஆடிய திண்டுக்கல் அணி பேட்டிங்கில் கோட்டை விட்டு தோல்வி அடைந்தது.

2019 டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிப் போட்டியில் சேப்பாக் அணியிடம் தோல்வி அடைந்த இருந்தது திண்டுக்கல் அணி. பின்னர், இரண்டாம் தகுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.

அஸ்வின் இல்லை

அஸ்வின் இல்லை

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் தூணாக இருந்து அணியை பிளே-ஆஃப் வரை அழைத்து வந்தார். எனினும், அவர் இல்லாமல் இரண்டாம் தகுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது திண்டுக்கல்.

விஜய் ஏமாற்றம்

விஜய் ஏமாற்றம்

சேப்பாக் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் கங்கா 4 ரன்களிலும், கோபிநாத் டக் அவுட்டும் ஆகி ஆட்டமிழந்தனர். வழக்கம் போல வந்த உடன் 1 ரன் எடுத்து மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழந்தார் விஜய் ஷங்கர்.

மீண்டது சேப்பாக்

மீண்டது சேப்பாக்

துவக்கத்தில் திண்டுக்கல் அணி பந்துவீச்சில் மிரட்டியது. அதனால், 55 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது சேப்பாக். அதன் பின் சசி தேவ் 44 ரன்களும், முருகன் அஸ்வின் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் குவிக்க சேப்பாக் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை எட்டியது.

திண்டுக்கல் சேஸிங்

திண்டுக்கல் சேஸிங்

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 127 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஹரி நிஷாந்த், ஜெகதீசன் துவக்கம் அளித்தனர். முதல் ஓவரை மெய்டனாக வீசினார் விஜய் ஷங்கர். அடுத்த ஓவரில் பெரியசாமி அசத்தல் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்கள் எடுத்தார். ஜெகதீசன், சதுர்வேத் என இருவரும் டக் அவுட் ஆனார்கள். ரன் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட்களை இழந்தது திண்டுக்கல்.

அசத்திய சேப்பாக்

அசத்திய சேப்பாக்

3வது ஓவரில் விஜய் ஷங்கர் ஹரி விக்கெட்டை வீழ்த்தினார். 4 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த திண்டுக்கல் அணி, நிதான ஆட்டத்துக்கு மாறியது. சுமந்த ஜெயின் மற்றும் அபினவ் ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுக்கவே சிரமப்பட்டு ஆடினர்.

திண்டுக்கல் போராட்டம்

திண்டுக்கல் போராட்டம்

சுமந்த 46, அபினவ் 21, அடுத்து வந்த விவேக் 23 ரன்கள் குவித்தனர். கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில் 19வது ஓவரில் 1 விக்கெட் இழந்து 8 ரன்கள் எடுத்தது திண்டுக்கல். கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவை, அந்த ஓவரை வீசினார் பெரியசாமி.

பெரியசாமி அசத்தல் ஓவர்

பெரியசாமி அசத்தல் ஓவர்

ஏற்கனவே, 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்த பெரியசாமி, கடைசி ஓவரில் வெறும் 2 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை அள்ளினார். மொத்தமாக 5 விக்கெட்களை சாய்த்தார் பெரியசாமி. திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2019 டிஎன்பிஎல் சாம்பியன்

2019 டிஎன்பிஎல் சாம்பியன்

2௦19 டிஎன்பிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். அஸ்வின் என்ற பெரும் அனுபவ வீரர் இல்லாமல் தடுமாறிய திண்டுக்கல் அணி துவக்க ஓவர்களில் விக்கெட்களை இழந்து முக்கியமான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. 5 விக்கெட்கள் அள்ளிய பெரியசாமி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Story first published: Friday, August 16, 2019, 0:20 [IST]
Other articles published on Aug 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+