For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காரைக்குடி காளையை அடக்கிய பெரியசாமி.. எளிதாக வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!

Recommended Video

TNPL 2019 : காரைக்குடி காளையை எளிதாக வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!- வீடியோ

திருநெல்வேலி : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் இடையே ஆன டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேப்பாக் அணி அபார வெற்றி பெற்றது.

டிஎன்பிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் மோதின.

TNPL 2019 : Chepauk Super Gillies vs Karaikudi Kaalai match result, highlights

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய காரைக்குடி காளை அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்ததால், 121 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் கங்கா ஸ்ரீதர் மற்றும் கோபிநாத் அருமையாக கூட்டணி அமைத்து முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தனர். கங்கா ஸ்ரீதர் 54 ரன்களும், கோபிநாத் 55 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து வந்த காந்தி 32 ரன்கள் சேர்த்தார், பின்னர், கடைசி மூன்று ஓவர்களில் அதிரடியாக ரன் குவிக்க வேண்டும் என்ற அவசரத்தில் விக்கெட்களை விரைவாக இழந்தது சேப்பாக் அணி. கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் ஆறு விக்கெட்களை இழந்தது.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழந்து 175 ரன்கள் குவித்தது. மிகவும் சவாலான இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது காரைக்குடி காளை. அந்த அணி கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருத்தாவை தான் நம்பி இருந்தது. ஆனால், அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்ற டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்களும் கைவிட்டனர். கடைசி நேரத்தில் யோ மகேஷ் 22, ஷாஜஹான் 27 ரன்கள் எடுத்தனர். எனினும், வெற்றி கைக்கு எட்டாத தூரத்திற்கு சென்றதால், காரைக்குடி காளை அணியின் தோல்வி உறுதியானது.

20 ஓவர்களில் காரைக்குடி அணி 8 விக்கெட்கள் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேப்பாக் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது அந்த அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.

சேப்பாக் அணியின் பெரியசாமி 3 ஓவர்கள் வீசி வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவர் தன் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

காரைக்குடி அணி இதுவரை மூன்று லீக் போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. சேப்பாக் அணி டான் ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Story first published: Friday, July 26, 2019, 23:06 [IST]
Other articles published on Jul 26, 2019
English summary
TNPL 2019 : Chepauk Super Gillies vs Karaikudi Kaalai match result and highlights
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+