Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றியுடன் துவக்கிய அஸ்வினின் திண்டுக்கல் அணி.. வாய்ப்பு இருந்தும் குப்புற விழுந்த சேப்பாக் அணி!

நத்தம் : டிஎன்பிஎல் டி20 தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.

நான்காவது சீசன் டிஎன்பிஎல் டி20 தொடர் திண்டுக்கல்லில் நடைபெற்றது. முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின.

விறுவிறுப்பு இல்லை

விறுவிறுப்பு இல்லை

கடந்த சீசனில் இறுதிப் போட்டியை எட்டிய, அஸ்வினை கேப்டனாக கொண்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், 2017 சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், பெரிய விறுவிறுப்பின்றி குறைந்த ரன்கள் அடித்த போட்டியாக அமைந்தது இந்த முதல் போட்டி.

திண்டுக்கல் துவக்கம்

திண்டுக்கல் துவக்கம்

இந்தப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. அந்த அணியின் துவக்க வீரர் ஹரி நிஷாந்த் 1 ரன் எடுத்து, பெரியசாமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து நாராயண் ஜெகதீசன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அஸ்வின் அதிரடி

அஸ்வின் அதிரடி

மூன்றாம் வரிசையில் அஸ்வின் களமிறங்கி அதிரடியாக ஆடினார். அவர் 19 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த வீரர்களும் கேப்டன் வழியில் அதிரடியாக ஆட முயன்றனர். எனினும், அவர்கள் திட்டம் வேலை செய்யவில்லை.

ரன் வேகம்

ரன் வேகம்

சதுர்வேத் 21, விவேக் 4, சுமந்த் ஜெயின் 10, அபினவ் 8, முகமது 3, சிலம்பரசன் 2 ரன்கள் எடுத்து வரிசையாக ஆட்டமிழந்தனர். 13வது ஓவர் வரை ரன் ரேட் ஏழில் இருந்தது. 14வது ஓவரில் இரண்டு விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்த பின் ரன் வேகம் குறைந்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது திண்டுக்கல் அணி.

சேப்பாக் பந்துவீச்சு எப்படி?

சேப்பாக் பந்துவீச்சு எப்படி?

சேப்பாக் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அலெக்சாண்டர், முருகன் அஸ்வின் அபாரமாக பந்துவீசினர். அவர்கள் இருவரும் முழுவதுமாக நான்கு ஓவர்களும் வீசி ஓவருக்கு 2.75 மற்றும் 3.75 ரன்களே கொடுத்தனர். ராகுல் 3 ஓவர்களில் 32 ரன்களும், ஹரிஷ் ஒரு ஓவரில் 16 ரன்களும் கொடுத்து சொதப்பினர். அலெக்ஸாண்டர் 3, முருகன் அஸ்வின் 2, ராகுல் 1, பெரியசுவாமி 1, சித்தார்த் 1 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் பந்தில் அதிர்ச்சி

முதல் பந்தில் அதிர்ச்சி

அடுத்து சேஸிங் செய்த சேப்பாக் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது, துவக்க வீரர் கௌஷிக் காந்தி முதல் பந்தில் டக் அவுட் ஆனார். அதே முதல் ஓவரில் கோபிநாத் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரில் கங்கா ஸ்ரீதர் டக் அவுட் ஆனார். 11 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்தது சேப்பாக் அணி.

சேப்பாக் விக்கெட் சரிவு

சேப்பாக் விக்கெட் சரிவு

பின்னர் மிடில் ஆர்டரில் ஆரிப் 16, சசிதேவ் 13, முருகன் அஸ்வின் 16 என சொற்ப ரன்கள் எடுத்து வெளியேறினர். 13 ஓவர்களில் சேப்பாக் அணி 6 விக்கெட்கள் இழந்து 58 ரன்கள் எடுத்து போராடியது. அடுத்து 17வது ஓவரில் சிலம்பரசன் இரண்டு விக்கெட்களையும், 18வது ஓவரில் முகமது 1 விக்கெட்டையும் வீழ்த்த சேப்பாக் அணியின் தோல்வி உறுதியானது.

பந்துவீச்சால் வெற்றி

பந்துவீச்சால் வெற்றி

20 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த சேப்பாக் அணி 9 விக்கெட்கள் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. 10 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. பேட்டிங்கில் இரு அணிகளுமே சொதப்பின. இருந்தாலும், பந்துவீச்சில் திண்டுக்கல் அணி சிறந்து விளங்கியதால் வெற்றி பெற்றது.

சிலம்பரசன் கலக்கல்

சிலம்பரசன் கலக்கல்

சிறப்பாக பந்துவீசிய சிலம்பரசன் 4 விக்கெட்கள் வீழ்த்தி திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் தவிர, திண்டுக்கல் அணியில் கௌஷிக் 2, முகமது 2, அபினவ் 1 விக்கெட் வீழ்த்தினர். சிலம்பரசன் ஆட்டநாயகன் விருதை வென்றார். அஸ்வினுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.

Story first published: Friday, July 19, 2019, 23:16 [IST]
Other articles published on Jul 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+