For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 வருஷம் வெயிட்டிங்.. இப்போ மகிழ்ச்சி.. முதல் பந்தில் ஷாக் கொடுத்த விஜய் ஷங்கர்!

Recommended Video

TNPL 2019 : Vijay shankar : முதல் பந்தில் ஷாக் கொடுத்த விஜய் ஷங்கர்- வீடியோ

திருநெல்வேலி : 2019 டிஎன்பிஎல் தொடரில் தன் அறிமுகப் போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய் ஷங்கர்.

2019 டிஎன்பிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம் பெற்றார் விஜய் ஷங்கர்.

தன் முதல் டிஎன்பிஎல் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிராக ஆடிய விஜய் ஷங்கர் பந்துவீச்சில் அசத்தினார்.

மூன்று ஆண்டுகள் கழித்து..

மூன்று ஆண்டுகள் கழித்து..

கடந்த மூன்று டிஎன்பிஎல் தொடரிலும் விஜய் ஷங்கர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. காயம் மற்றும் இந்தியா ஏ அணிக்காக ஆடியது என சில கரணங்களால் முன்னணி தமிழக வீரராக இருந்தும் அவரால் டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து இந்த தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்றார்.

கடைசி லீக் போட்டி

கடைசி லீக் போட்டி

மூன்று தொடர்கள் கழித்து வாய்ப்பு பெற்றாலும், இந்த ஆண்டும் சேப்பாக் அணியின் கடைசி லீக் போட்டியில் தான் களமிறங்கினார் விஜய் ஷங்கர். இதற்கு காரணம் அவருக்கு உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்டு இருந்த காயம் தான் என கூறப்படுகிறது.

முதல் பந்தில் விக்கெட்

முதல் பந்தில் விக்கெட்

இந்தப் போட்டியில், சேப்பாக் அணி நிர்ணயித்த 128 ரன்கள் இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது தூத்துக்குடி அணி. முதல் ஓவரை விஜய் ஷங்கர் வீசினார். தான் வீசிய முதல் பந்திலேயே ஆகாஷ் சிவன் விக்கெட்டை வீழ்த்தினார்.

உலகக்கோப்பையில் நடந்தது

உலகக்கோப்பையில் நடந்தது

உலகக்கோப்பை தொடரில் முதன் முதலாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக பந்து வீசினார். அப்போதும் தன் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தார். அதே போல, டிஎன்பிஎல் தொடரில் தன் அறிமுகப் போட்டியில் முதல் பந்தில் விக்கெட் எடுத்து அசத்தினார்.

பேட்டிங் பார்ம் அவுட்

பேட்டிங் பார்ம் அவுட்

பந்துவீச்சில் 3.5 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ஆனால், பேட்டிங்கில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார் விஜய். உலகக்கோப்பை தொடரிலும் பேட்டிங்கில் சொதப்பிய அவர், மீண்டும் ஒருமுறை தன் பேட்டிங்கில் சொதப்பி இருக்கிறார்.

Story first published: Saturday, August 10, 2019, 13:21 [IST]
Other articles published on Aug 10, 2019
English summary
TNPL 2019 : Vijay Shankar got first ball wicket as same as in World cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+