Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 மாதத்துக்கு பிறகு கிரிக்கெட் போட்டியில் அஸ்வின்.. டிஎன்பிஎல் தொடரில் கலக்கல் பந்துவீச்சு

கோவை: தமிழ்நாடு பிரீமியர் லீக் 2022 தொடரில் கோவை மண்ணில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீஸனில் தங்களின் 3வது வெற்றியை சேப்பாக்கம் பதிவு செய்தது

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸிற்கு கேப்டனாக முதன்முறையாக அஸ்வின் களமிறங்கினார்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

டாஸ் வென்ற சேப்பாக் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் பவர்ப்ளேவிற்குள் தங்களின் முக்கிய பேட்ஸ்மேன்களான ஹரி நிஷாந்த்(1 ரன்), விஷால் வைத்யா(2 ரன்கள்) மற்றும் மோஹித் ஹரிஹரன்(6 ரன்கள்) விக்கெட்களை இழந்து மிகவும் இக்கட்டாண தருணத்தில் சிக்கியது.

அஸ்வின் பேட்டிங்

அஸ்வின் பேட்டிங்

அந்த சமயத்தில் திண்டுக்கல் கேப்டன் அஷ்வின் மற்றும் அந்த அணியின் அனுபவ வீரர் மணி பாரதி இணைந்து நிதானமாக விளையாடி மெல்ல அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர். பெரும் எதிர்பார்ப்பு அஷ்வின் மீது இருந்தாலும் அவர் 25 ரன்கள் மட்டுமே எடுத்து சித்தார்த்தின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

138 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

138 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

மணி பாரதி 37 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து சோனு யாதவிடம் ஆட்டமிழக்க, விவேக் ராஜ் மட்டும் தனி ஒருவராக அதிரடியாக விளையாடி 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் தனது 7வது அரைசதத்தை பதிவு செய்ததோடு இந்த சீஸனில் தன் முதல் அரைசதத்தை அடித்தார். இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சேப்பாக் அபாரம்

சேப்பாக் அபாரம்

இதனையடுத்து களமிறங்கிய சேப்பாக்கின் ஓப்பனர்கள் ஜெகதீசன் மற்றும் கெளஷிக் காந்தி நிதானமாக ஆட்டத்தை தொடங்கி முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் சேர்த்தனர். நாராயண் ஜெகதீசன் 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து மோனிஷ் சதீஷின் சுழலில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆட்டத்தை சேப்பாக் பக்கம் திருப்பிய கேப்டன் கெளஷிக் காந்தி 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவரும் மோனிஷிடம் வீழ்ந்தார்.

அஸ்வின் பந்துவீச்சு

அஸ்வின் பந்துவீச்சு

அதன்பின்னர் சேப்பாக் அணி எந்த தருணத்தையும் திண்டுக்கல்லுக்கு விட்டுக்கொடுக்காமல் ஆட்டத்தை தங்கள் வசம் எடுத்துச் சென்று 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங் சற்று சறுக்கலை சந்தித்தது. முக்கிய தருணத்தில் திண்டுக்கல் அணியினர் கிடைத்த பல கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர். இதில் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 21 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

Story first published: Sunday, July 17, 2022, 0:58 [IST]
Other articles published on Jul 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+