Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிங்கில் பொளந்து கட்டிய மும்பை இந்தியன்ஸ் வீரர்.. டிஎன்பிஎல் முதல் ஆட்டத்தில் சரவெடி..வேற லெவல்!

நெல்லை: டிஎன்பிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி மோதியது.

டாஸ் வென்ற சூப்பர் கில்லீஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து நெல்லை அணி வீரர்கள் பேட்டிங்கில் களமிறங்கினர்.

தொடக்கத்தில் சேப்பாக் அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி, நெல்லை அணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர்.

ஆரம்பத்தில் தடுமாற்றம்

ஆரம்பத்தில் தடுமாற்றம்

ரஞ்சன் பால் 7 ரன்களிலும், பாபா அப்ரஜித் 2 ரன்களிலும், கேப்டன்பாபா இந்தரஜித் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் நெல்லை அணி 27 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் தொடக்க வீரராக களமிறங்கியசூர்யபிரகாஷ் 50 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

மும்பை இந்தியன்ஸ் வீரர்

மும்பை இந்தியன்ஸ் வீரர்

ஆனால் நெல்லை அணி திக்கு தடுமாறிய நேரத்தில் களமிறங்கினார் சஞ்ச யாதவ். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடியவர். 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலையை கொண்ட சஞ்சய் யாதவை 50 லட்சம் கொடுத்து மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சஞ்சய் யாதவ், 1 போட்டியில் களமிறங்கி அதிலும் 2 ஓவர் மட்டும் வீசி 23 ரன்கள் எடுத்தார்.

30 பந்துகளில் அரைசதம்

30 பந்துகளில் அரைசதம்

இதை தவிர அவருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், தமது திறமையை பேட்டிங்கில் இன்று சஞ்ச யாதவ் வெளிக்காட்டினார். சேப்பாக் சுழலில் நெல்லை சிக்கி தத்தளித்த நிலையில், அந்த அணியை மீட்கும் மீட்பராய் பேட்டிங்கில் அதிரடியை காட்டினார் சஞ்சய் யாதவ். இதன் மூலம் 30 பந்துகளில் அரைசதம் கடந்த சஞ்ச யாதவ், 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசினார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

அத்துடன் சஞ்சய் நிற்கவில்லை, அதன் பிறகு மேலும் 17 பந்தகளில் அடுத்த 37 ரன்களை அவர் விளாசினார். அவருக்கு அஜித்தேஷ் 8 பந்துகளில் 16 ரன்கள் விளாசி துணை நிற்க, நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. தற்போது சஞ்சய்யின் பேட்டிங்கை பார்த்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் இந்த செல்லத்துக்கா வாய்ப்பு தரல என்று கோபத்தில் உள்ளனர்.

Story first published: Thursday, June 23, 2022, 22:14 [IST]
Other articles published on Jun 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+