கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வருகிறது டிஎன்பிஎல் தொடர்.. ஐபிஎல்-ஐ போன்றே மாற்றங்கள்!

சென்னை: ஐபிஎல் தொடர் முடிவடைந்த சூழலில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த விருந்து ரெடி ஆகியுள்ளது.

Recommended Video

TNPL 2022 Schedule Release ஆயிடிச்சு! IPLக்கு அப்புறம் ஆரம்பம் | OneIndia Tamil

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த முறை சென்னை அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்ல முடியாததால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு பேட்டிங்கில் புது இடம்.. 3 வீரர்களின் இடத்திற்கு ஆப்பு..சீனியர் சூப்பர் ஐடியா ஹர்திக் பாண்ட்யாவுக்கு பேட்டிங்கில் புது இடம்.. 3 வீரர்களின் இடத்திற்கு ஆப்பு..சீனியர் சூப்பர் ஐடியா

புது அறிவிப்பு

புது அறிவிப்பு

இந்நிலையில் அவர்களை குஷிப்படுத்த, புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ள சூழலில் 6வது சீசனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் ஜூன் 23ம் தேதி தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

எங்கெங்கு நடைபெறுகிறது

எங்கெங்கு நடைபெறுகிறது

ஐபிஎல் தொடரை போன்றே இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 28 லீக் போட்டிகளும் திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் என 3 நகரங்களில் மட்டுமே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ப்ளே ஆஃப் போட்டிகள் சேலம் மற்றும் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது.

டபுள் ஹெட்டர்கள்

டபுள் ஹெட்டர்கள்

ஐபிஎல்-ஐ போன்றே டிஎன்பிஎல் தொடரிலும் டபுள் ஹெட்டர்கள் உள்ளன. மொத்தமுள்ள 6 டபுள் ஹெட்டர்களில் முதல் போட்டி மதியம் 3.15 மணிக்கும் 2வது போட்டி இரவு 7.15 மணிக்கும் தொடங்கவுள்ளது. இப்போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அதிக எதிர்பார்ப்புகள்

அதிக எதிர்பார்ப்புகள்

ஐபிஎல் தொடரில் சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல தமிழக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் இந்தாண்டும் தமிழக வீரர்கள் டிஎன்பிஎல் தொடரில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
TNPL 2022: Tamil Nadu Premier League 2022 kick to start from june 23
Story first published: Tuesday, May 31, 2022, 19:17 [IST]
Other articles published on May 31, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X