TNPL 2023 - அதிக ரன்கள் குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்.. முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?
சென்னை : டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எலிமினேட்டர் போட்டி முடிவடைந்த நிலையில் இறுதி போட்டியில் கோவையுடன் மோத போவது யார் என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.
கோவை மற்றும் நெல்லை அணிகள் குவாலிஃபையர் 2 நாளை நடைபெறும் நிலையில் இதுவரை நடைபெற்ற போட்டியில் முடிவு எந்த வீரர்கள் அதிக ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

டிஎன்பிஎல் தொடர் எப்போதுமே தமிழக இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இதன் மூலம் நிறைய கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் வரை சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் டிஎன்பிஎல் மூலம் ஐபிஎலில் கலக்கிய சாய் சுதர்சன், நடப்பு சீசனிலும் பட்டாசை கொளுத்திருக்கிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 371 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 90 ரன்கள் அடித்திருக்கிறார்.172 என்ற அளவில் இருக்கிறது.
சாய் சுதர்சன் இந்த சீசனில் நான்கு அரை சதம் அடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் அஜித்தேஷ் போட்டிகளில் விளையாடி 311 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு சதமும் இரண்டு அரை சதமும் அடங்கும். 163 என்ற அளவில் ஸ்டரைக் ரேட் இருக்கிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் அனுபவ வீரர் பாபா அப்ரஜித் பிடித்திருக்கிறார்.
இவர் 7 போட்டிகளில் விளையாடி 283 ரன்களை குவித்திருக்கிறார். அதிகபட்சமாக 79 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த தொடரில் அவர் இரண்டு அரை சதமும் விளாசி இருக்கிறார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் திண்டுக்கல் வீரர் சிவம் சிங் எட்டு போட்டிகளில் விளையாடி 280 ரன்கள் குவித்திருக்கிறார். சிவம் சிங் மூன்று அரை சதம் அடித்திருக்கிறார்.
இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை சுரேஷ்குமார் பிடித்திருக்கிறார். எட்டு போட்டிகளில் விளையாடி 223 ரன்களை அவர் அடித்திருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். இதைப் போன்று பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மதுரை அணிக்காக விளையாடிய குர்ஜப்நித்சிங் 15 விக்கெட்களையும், திண்டுக்கல் அணிக்காக விளையாடிய சுபோத் பாத்தி 15 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும் அதிரடி வீரர் ஷாருக்கான் 14 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications