For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

TNPL 2023 - ஜெகதீசன் படைத்த பிரம்மாண்ட சாதனை.. முதல் வீரர் என்ற பெருமை.. சேப்பாக்கத்திற்கு சோகம்

மும்பை : தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 தொடரின் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரையுடன் பலப்பரீட்சை நடத்தியது.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த சீகம் மதுரை பேந்தர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. இக்கட்டான தருணத்தில் அந்த அணியை சரிவிலிருந்து மீட்ட ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வெறும் 30 பந்துகளில் 56*ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 TNPL 2023 - N Jagadeesan achieved 2000 runs milestone in csg vs madurai

சேப்பாக் சூப்பர் கில்லீஸின் பெளலிங்கில் சிறப்பாக பந்துவீசி பாபா அபரஜித் மற்றும் சிலம்பரசன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இந்த சீஸனில் தங்களின் 3வது வெற்றியைப் பதிவு செய்ய 20 ஓவர்களில் 142 ரன்கள் அந்த அணிக்கு தேவைப்பட்டது.

ஓப்பனர்கள் சந்தோஷ் சிவ் மற்றும் அவர்களின் கேப்டன் நாராயண் ஜெகதீசன் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். முதல் விக்கெட்டிற்கு இவ்விருவரும் இணைந்து 59 ரன்கள் சேர்க்க சந்தோஷ் சிவ் 28 ரன்களில் முருகன் அஷ்வினின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நாராயண் ஜெகதீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் 2000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்தப் போட்டியில் படைத்தார். மேலும் இதற்காக அவர் 58 போட்டிகளை எடுத்துக் கொண்டதோடு அதில் 1 சதம் மற்றும் 18 அரைசதங்களை விளாசியுள்ளார்.பொறுப்புடன் விளையாடி வந்த நாராயண் ஜெகதீசனும் 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து முருகன் அஷ்வினின் சுழலில் விக்கெட்டை இழந்தார்.

வெற்றியை எட்டிவிடும் தூரத்திலிருந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சீரான இடைவெளியில் தங்களின் முக்கிய பேட்டர்களான சஞ்சய் யாதவ்(9) ப்ரதோஷ் ரஞ்சன் பால்(3) மற்றும் யூ சசிதேவ் (6) விக்கெட்களை இழக்க, ஆட்டத்தின் திசை சீகம் மதுரை பேந்தர்ஸை நோக்கி நகரத் தொடங்கியது.

கடைசி 2 ஓவர்களில் 5 விக்கெட்கள் கைவசமிருக்க வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹரீஷ் குமார் 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.சீகம் மதுரை பேந்தர்ஸிற்காக 19வது ஓவரை வீசிய அஜய் கே கிருஷ்ணா அபாரமாக பந்துவீசி அந்த ஒரே ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸை ஸ்தம்பிக்கச் செய்தார். அதோடு தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸிற்கு ஒரே நம்பிக்கையாக பாபா அபரஜித் மட்டும் களத்தில் நிற்க 20வது ஓவரின் முதல் பந்தில் குர்ஜப்நீத் சிங்கிடம் தனது விக்கெட்டை இழக்க. ஓட்டுமொத்தமாக ஆட்டம் சீகம் மதுரை பேந்தர்ஸ் பக்கம் திரும்ப அந்த அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த சீஸனில் தங்களின் 2வது வெற்றியைப் பதிவு செய்தது, வெற்றியின் மூலம் சீகம் மதுரை பேந்தர்ஸ் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தையும் தோல்வியடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ந்து 4வது இடத்திலும் நீடிக்கிறது.

Story first published: Tuesday, June 27, 2023, 0:13 [IST]
Other articles published on Jun 27, 2023
English summary
TNPL 2023 - N Jagadeesan achieved 2000 runs milestone in csg vs madurai TNPL 2023 - ஜெகதீசன் படைத்த பிரம்மாண்ட சாதனை.. முதல் வீரர் என்ற பெருமை.. சேப்பாக்கத்திற்கு சோகம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+