Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிஎன்பிஎல் தொடரில் ஞாயிறு 2 பட்டாசு போட்டிகள்.. புள்ளி பட்டியல் முழு விவரம்.. இதோ

திண்டுக்கல் : தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் முதல் கட்ட ஆட்டம் கோவையில் நடந்து முடிந்த நிலையில், ஞாயிறு முதல் திண்டுக்கலில் நடைபெற உள்ளது. இந்த சீஸனில் சாய் சுதர்ஷன் இரண்டு போட்டிகளில் 86 மற்றும் 90 ரன்கள் அடித்து மொத்தமாக 176 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு கேப்பை தன் வசப்படுத்தியுள்ளார்.

நெல்லை ராயல் கிங்ஸின் பொய்யாமொழி 2 போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து பர்ப்பிள் கேப்பை தன் வசப்படுத்தியுள்ளார்.

TNPL 2023 Points table and Dindigul vs Madurai preview details

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 புள்ளிகள் பட்டியலில் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றிப் பெற்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்ததாக நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிப் பெற்று 2ஆம் இடத்திலுள்ளது. ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மட்டும் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது.

அதே போல் புதிய அணியாக களமிறங்கிய பால்சி திருச்சி, சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிகள் இந்த தொடரில் இன்னும் வெற்றியை ருசிக்கவில்லை. இந்த நிலையில் ஜுன் 18ஆம் தேதி முதல் ஜுன் 22ஆம் தேதி வரை மொத்தமாக 7 லீக் போட்டிகள் திண்டுக்கல் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஞாயிற்றுகிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் பால்சி திருச்சி அணிகள் பிற்பகல் 3 மணிக்கு மோதுகின்றனர்.

இவ்விரு அணிகளும் இந்த சீஸனில் இதுவரை வெற்றியைப் பெறாததால் தங்களின் முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அடுத்ததாக இரவு 7 மணிக்கு திண்டுக்கல் டிராகன்ஸ் தங்களின் சொந்த மண்ணில் சீகம் மதுரை பேந்தர்ஸிற்கு எதிராக களமிறங்கவுள்ளது.

ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஏற்கனவே தங்களின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் தங்களின் சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற கட்டாயம் முயற்சிக்கும். அவர்களுக்கு எதிராக விளையாடும் டி.என்.பி.எல் முன்னாள் சாம்பியன் அணியான சீகம் மதுரை பேந்தர்ஸ் தங்களின் முதல் வெற்றியைத் தேடி நாளை களமிறங்கவுள்ளது.

புள்ளி பட்டியல்

அணிகள் போட்டிகள் வெற்றிகள் தோல்விகள் N/R புள்ளிகள் நெட் ரன் ரேட்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 2 0 0 4 2.35
நெல்லை ராயல் கிங்ஸ் 2 2 0 0 4 1.56
திண்டுக்கல் டிராகன்ஸ் 1 1 0 0 2 2.22
லைகா கோவை கிங்ஸ் 2 1 1 0 2 1.72
பால்சி திருச்சி 1 0 1 0 0 -2.22
சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 1 0 1 0 0 -2.6
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 2 0 2 0 0 -2.68
சீகம் மதுரை பேந்தர் 1 0 1 0 0 -3.13
Story first published: Saturday, June 17, 2023, 23:54 [IST]
Other articles published on Jun 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+