Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL போல் பட்டையை கிளப்ப வந்தாச்சு TNPL.. ரசிகர்களை கவர புதிய மாற்றங்கள்.. எந்த சேனலில் பார்ப்பது?

சென்னை : ஐபிஎல் எப்படி இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறதோ, அதே போல், டிஎன்பிஎல் தொடர் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை கண்டறிய பயன்படுகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎல் தொடரை நடத்தி வருகிறது. அதன்படி டி.என்.பி.எல் தொடரின் 7வது சீசன் வருகிற ஜூன் 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 12 வரை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணிக்கான வீரர்களை டிராஃப்ட் முறையில் தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால் இந்தாண்டு முதன்முறையாக ஐபிஎல் டி20 லீக்கைப் போல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரிலும் ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலத்தின் அடிப்படையில் தேர்வு செய்தனர்.

TNPL 2023 season 7 is going to kick start from june 12

.குறிப்பாக, ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸிற்காக விளையாடி வரும் தமிழக வீரரான சாய் சுதர்ஷன் 21.6 இலட்சங்களுக்கு டி.என்.பி.எல்லின் லைகா கோவை கிங்ஸால் வாங்கப்பட்டார்.

இதில் கவனிக்கப் பேட வேண்டியது என்னவென்றால், ஐபிஎல் ஏலத்தை விட டி.என்.பி.எல் ஏலத்தில் சாய் சுதர்ஷன் அதிக விலைக்கு வாங்கப்பட்டார்.தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் (ba11sy) பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் , சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் சென்ற ஆண்டு வரை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியாக டி.என்.பி.எல் தொடரில் பங்கேற்று வந்த திருச்சி அணி இந்த ஆண்டு பால்ஸி திருச்சி(BALLSY TRICHY)அணியாக பெயர் மாற்றம் கொண்டு விளையாடவுள்ளது. இந்த அணியை ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதுவரை நடந்து முடிந்த 6 சீஸன்களிலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் பங்கேற்ற அணிகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். அதில் டி.என்.பி.எல்லின் அறிமுக சீஸனில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி முதல் வருட கோப்பையை கைப்பற்றியது. ஆனால் அதன் பின்னர் 2017, 2019 ,2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரை 4 முறை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தற்போதைய நடப்பு சாம்பியனாகவும் வலம் வருகிறது.

TNPL 2023 season 7 is going to kick start from june 12

முதல் இரண்டு ஆண்டுகளில் வெற்றியை சுவைக்காத மதுரை அணி 2018ஆம் ஆண்டு சீகம் மதுரை பேந்தர்ஸாக பெயர் மாற்றத்துடன் களமிறங்கி முதன்முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது. சென்ற ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் இணைந்து லைகா கோவை கிங்ஸ் அணி 6வது சீஸனின் டி.என்.பி.எல் பட்டத்தை பகிர்ந்து கொண்டது.

ஐபிஎல் தொடரை போல் இம்முறை இம்பேக்ட் வீரர் விதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் , டிஆர்எஸ் விதியும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால், டிஆர்எஸ் விதியை நோ பால் அல்லது Wide ah என்பதற்கு பயன்படுத்த முடியாது.

தொலைக்காட்சி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD சேனல்கள்
டிஜிட்டல் ஒளிபரப்பு: ஃபேன்கோட் (FANCODE)

Story first published: Friday, June 2, 2023, 16:53 [IST]
Other articles published on Jun 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+