Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் அணிக்கே விபூதியா.. வாய்ப்பே இல்ல ராஜா.. தோல்வியில் முடிந்த திருப்பூர் அணியின் மன்கட் முயற்சி

சேலம்: திருப்பூர் அணியின் பந்துவீச்சாளர் கருப்பசாமி திண்டுக்கல் அணியின் சிவம் சிங்கை மன்கட் செய்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்த நிலையில், அந்த வீடியோ ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது பட்லரை, பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மன்கட் முறையில் வீழ்த்தினார். அஸ்வினின் செயல்கள் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதன்பின்னர் பவுலர்கள் மன்கட் செய்வதில் எந்த தவறும் இல்லை, இதனால் கிரிக்கெட்டின் புனிதம் பாதிக்காது என்று அஸ்வினே பலமுறை விளக்கம் கொடுத்தார்.

TNPL 2023: Tiruppur bowler Karuppusamy has failed to run out Shivam Singh at the non-striker end video is trending in Social Media

கிட்டத்தட்ட ரசிகர்களையும் மன்கட் செய்வதற்கு ஆதரவான கருத்துகளை பேச வைத்தார் என்று சொல்லலாம். அதன்பின்னர் எம்சிசி-யே மன்கட் விதியை மாற்றியமைத்து பெயரையும் ரன்அவுட் என்று மாற்றியது. அதன்பின்னர் ஐபிஎல் தொடரிலேயே பலமுறை பவுலர்கள் மன்கட் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டிஎன்பிஎல் தொடரில் அஸ்வினின் திண்டுக்கல் அணிக்கு எதிராகவே திருப்பூர் அணி பவுலர் மன்கட் செய்ய முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் - திருப்பூர் அணிகள் மோதின. துலீப் டிராபியில் விளையாட அஸ்வின் சென்றுள்ளதால், இந்தப் போட்டியில் அவருக்கு பதிலாக பாபா இந்திரஜித் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதில் முதலில் பேட்டிங் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சாய் கிஷோர் 45 ரன்களும், விஜய் சங்கர் 43 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர் விமல் குமார் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், சிவம் சிங் - பூபதி வைஷ்ணவ் குமார் கூட்டணி இணைந்து திண்டுக்கல் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அப்போது 8வது ஒவரை வீச கருப்பசாமி அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 3வது பந்தில் திண்டுக்கல் அணி சிவம் சிங்கை மன்கட் செய்தார்.

இந்த முடிவு மூன்றாம் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மன்கட் செய்த போது சிவம் சிங்கின் பேட், கிரீஸில் இருந்தது தெரிய வந்தது. இதனால் திருப்பூர் அணியின் மன்கட் முயற்சி தோவ்லியில் முடிவடைந்தது. அஸ்வின் கேப்டனாக இருக்கும் அணிக்கு எதிராக மன்கட் செய்த வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Thursday, June 29, 2023, 8:31 [IST]
Other articles published on Jun 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+