Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

12 ஆயிரம் ரூபாய் பந்து.. என் தோட்டத்தில் விழுந்ததால் எனக்கு தான் சொந்தம்.. TNPL தொடரில் கலகல வீடியோ

ஐபிஎல் தொடரில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் வீரர் சிக்ஸர் அடித்த பந்து மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்த நிலையில்,அதனை தோட்ட உரிமையாளர் திருப்பி தராமல் தூக்கிக்கொண்டு ஓடிய சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டிஎன்பிஎல் தொடர் தற்போது பிளே ஆப் சுற்றில் நெருங்கி இருக்கிறது. சுமார் 28 ஆட்டங்கள் முடிவடைந்த பிறகு தற்போது பிளே ஆப் சுற்றுக்கு கோவை, திருப்பூர், சேப்பாக், திண்டுக்கல் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கிறது.

TNPL 2024

இதில் முதல் குவாலிபயர் ஆட்டம் செவ்வாய் கிழமை 30ஆம் தேதி கோவை, திருப்பூர் அணிகள் பல பரிட்சை நடத்துகிறது. ஜூலை 31ஆம் தேதி எலிமினேட்டர் ஆட்டத்தில் சேப்பாக்கம்,திண்டுக்கல் அணிகள் விளையாடுகிறது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை, சேப்பாக்கம் பலப் பரிட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதில் சுரேஷ் யோகேஸ்வர் 40 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் கௌஷிக் 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களம் இறங்கியது.

இதில் சந்தோஷ்குமார் 36 பந்துகளில் 48 ரன்களும், நாராயன் ஜெகதீசன் ஆறு பந்துகளின் 10 ரன்களும், கேப்டன் பாபா அப்ரஜித் 7 பந்துகளில் 17 ரன்களும் எடுத்தனர். பிரதோஷ ரஞ்சன் பால் 37 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் தான் எடுத்தது.

அப்போது சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது வீரர் ஒருவர் அடித்த பந்து மைதானத்திற்கு மைதானத்திற்கு வெளியே சென்று ஒரு தோட்டத்தில் விழுந்தது. அப்போது அங்கு இருந்த இளைஞர் ஒருவர் பந்தை எடுத்துக்கொண்டு நான் திருப்பி தர மாட்டேன் என கூறினார். உடனே கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்கள், அது 12000 ரூபாய் பந்து என்றும் அதை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என நேரலையில் கமெண்ட் செய்தனர்.

ஆனால் பந்து எங்கள் தோட்டத்தில் வந்து விழுந்ததால் தரமாட்டோம் என கூறி அந்த இளைஞர்கள் பந்தை எடுத்துச் சென்றனர். எப்படி 90ஸ் கிட்ஸ்கள் தெருவில் கிரிக்கெட் ஆடும் போது பந்து யார் வீட்டிலாவது விழுந்தால் அவர்கள் தரமாட்டார்களோ, அதைப்போல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரிலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தி உள்ளது.

Story first published: Monday, July 29, 2024, 22:58 [IST]
Other articles published on Jul 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+