சாவடிச்சிடுவேன்! திண்டுக்கல் வீரர்களை பார்த்து கோபமாக கத்திய அஸ்வின்.. என்ன நடந்தது?
திண்டுக்கல் : டி என் பி எல் கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
இதில் கேப்டன் பாபா அப்ரஜித் 54 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். நாராயண் ஜெகதீசன் 16 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். இதனால் திண்டுக்கல் பந்துவீச்சு தரப்பில் சந்திப் வாரியர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதை அடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய திண்டுக்கல் அணியில் சிவம் சிங் அபாரமாக விளையாடி 49 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். கேப்டன் அஸ்வின் 35 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். இதனால் 19.5 ஓவரில் திண்டுக்கல் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஆட்டத்தின் 16-வது ஓவரில் திண்டுக்கல் வீரர்கள் ரன் ஓடும்போது அலட்சியமாக செயல்பட்டனர். இதனால் ரன் அவுட் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. ஒருவேளை சிவம் சிங் ரன் அவுட் ஆகி இருந்தால் நிச்சயம் பிரச்சனை ஏற்பட்டிருக்கும்.இதனால் கடுப்பான அஸ்வின் ஆடுகளத்திற்கு வெளியே Dug out-ல் அமர்ந்திருந்த போது திடீரென்று கோபமாகி திண்டுக்கல் பேட்ஸ்மேன்களை கடுமையாக திட்டினார்.

அப்போது கையை உயர்த்தி சாகடித்து விடுவேன் என்று அஸ்வின் கோபமாக பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. சாதாரண ஒரு போட்டியாக இது இருந்தாலும் வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக அஸ்வின் தீவிரமாக செயல்படுகிறார் என்று பலரும் அவரை கமெண்ட் அடித்து வருகின்றனர்.
அஸ்வின் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் ஒரு தாதா போல் களத்திற்கு வெளியே செயல்படுவதாக ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.தங்கள் அணிவீரரை தான் அஸ்வின் திட்டி இருக்கிறார் என்பதால் இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications