For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

TNPL 2024 - அஸ்வின் மனசு தங்கம் யா! பேருந்து ஓட்டுனரை அழைத்து கோப்பையை வாங்க சொன்ன அஸ்வின்

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை திண்டுக்கல் அணி முதல் முறையாக கைப்பற்றி அசத்தியது. 37 வயதான தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தமது ஓய்வு நேரத்தில் திண்டுக்கல் அணியை கேப்டனாக வழி நடத்தினார்.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை சாம்பியன் ஆன லைக்கா கோவை கிங்ஸ் அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய திண்டுக்கல் அணி கோவை அணியை பேட்டிங் செய்ய பணித்தது.

tnpl 2024 r ashwin dindigul dragons

இதில் கோவை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஸ்வின் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்கொண்டு திண்டுக்கல் அணி களமிறங்கியது. இதில் கேப்டன் அஸ்வின் பேட்டிங்கில் ஹாட்ரிக் அரை சதத்தை அடித்தார்.

tnpl 2024 r ashwin dindigul dragons

46 பந்துகளில் 52 ரன்கள் அஸ்வின் அடித்தார். இதில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி அடங்கும். இதன் மூலம் 18.2 ஓவர்கள் எல்லாம் திண்டுக்கல் அணி நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது. இந்த நிலையில் எப்போதும் வெற்றி பெறும் அணியின் கேப்டன் கோப்பையை வாங்கி இளம் வீரர்களிடம் கொடுத்து கொண்டாட சொல்லி பார்த்திருப்போம்.

ஒரு சிலர் அணி நிர்வாகிகளை அழைத்து கொண்டாட்டத்தில் பங்கு பெறுமாறு கூறுவார்கள். ஆனால் அஸ்வின் ஒரு படி மேல் போய் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை செய்திருக்கிறார். திண்டுக்கல் வெற்றி கொண்டாட்டத்தில் ஒரு வயதான நபர் இருந்தார். அவரைப் பார்க்கும்போது கிரிக்கெட் பயிற்சியாளர் குழுவில் இடம் பெற்றவர் போல் தெரியவில்லையே என ரசிகர்களும் சந்தேகம் அடைந்தனர்.

அதன் பிறகு தான் தெரிந்தது, அஸ்வின் தன்னுடைய பேருந்து ஓட்டுநரை அழைத்து கோப்பையை வாங்க சொல்லி வெற்றி கொண்டாட்டத்தில் பங்கு பெற செய்யவும் வைத்திருக்கிறார். அஸ்வினின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Monday, August 5, 2024, 16:37 [IST]
Other articles published on Aug 5, 2024
English summary
TNPL 2024 - R Ashwin Hand overs the cup to team bus driver in victory celebration TNPL 2024 - அஸ்வின் மனசு தங்கம் யா! பேருந்து ஓட்டுனரை அழைத்து கோப்பையை வாங்க சொன்ன அஸ்வின்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+