For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

TNPL 2025: ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்.. 34 ரன்கள்! சேப்பாக்கை வீழ்த்தி பைனலில் திண்டுக்கல்

திண்டுக்கல்: டிஎன்பிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குவாலிஃபையர் ஆட்டத்தில் லீக் சுற்றில் தோல்வியை தழுவாத சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணியை திண்டுக்கல் அணி வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் அஸ்வின் தலைமையிலான நடப்பு சாம்பியன் திண்டுக்கல் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு சென்று இருக்கிறது.

திண்டுக்கல்லில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆசிக், மோகித் ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க கேப்டன் பாபா அப்ரஜித் 44 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார்.

TNPL 2025

இதில் 5 பவுண்டரிகளும், மூன்று சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று மற்றொரு நட்சத்திர வீரராக நாராயன் ஜெகதீசன் 41 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். இதில் 4 பவுண்டரிகளும் ஆறு சிக்சர்களும் அடங்கும். விஜய் சங்கர் உள்ளிட்ட மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

இதன் காரணமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஸ்வின் நான்கு ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட் எடுத்திருந்தார். இதைப் போன்று வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.

இதனை அடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் அஸ்வின் 20 பந்துகளின் 21 ரன்கள் சேர்க்க, சிவம் சிங் 27 ரன்களின் ஆட்டம் இழந்தார். பாபா அப்ரசித் 42 ரன்கள் எடுக்க திண்டுக்கல் அணி தடுமாறியது.

ஒரு கட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் கையை ஓங்கி இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 17 வது ஓவர் முற்றிலுமாக போட்டியை மாற்றியது. திண்டுக்கல் அணியின் விமல் குமார் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ரோகித் சுதர் பந்து வீசினார். அப்போது முதல் பந்து பவுண்டரிக்கு சென்றது.

இதையடுத்து அடுத்த ஐந்து பந்துகளிலும் தொடர்ந்து ஐந்து சிக்சர்களை விமல் குமார் விளாசினார். இதன் மூலம் ஆட்டத்தின் 17 ஆவது ஓவரில் 34 ரன்கள் எடுத்தது. இதனால் 24 பந்துகளுக்கு 52 ரன்கள் என்று இருந்த வெற்றி இலக்கு 18 பந்துகளில் 18 ரன்கள் என மாறியது. இதனை அடுத்து திண்டுக்கல் அணி 18 புள்ளி நான்காவது ஓவரிலே எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக சென்று இருக்கிறது.

Story first published: Friday, July 4, 2025, 23:56 [IST]
Other articles published on Jul 4, 2025
English summary
TNPL 2025- 34 Runs in single over by Vimal khumar as Dindigul Qualified in to final
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+