Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

TNPL 2025 புள்ளி பட்டியல்.. பிளே ஆப் சுற்றுக்கு எந்த அணி தகுதி பெற்றது? 7 போட்டியிலுமே வென்ற CSG

மும்பை: டிஎன்பிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் ஐந்தாம் தேதி இந்தப் போட்டிகள் தொடங்கி நடைபெற்றிருக்கிறது. ஜூலை 6ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும். தற்போது இந்த தொடரின் கடைசி லீக் சுற்றுப்போட்டியில் நாளையுடன் முடிவடைகிறது.

இந்த சூழலில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற உள்ள நிலையில், ஏற்கனவே மூன்று அணிகள் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விட்டது. இந்த சூழலில் நான்காவது இடம் பிடிக்க போகும் அணி எது என்று இன்று அல்லது நாளை தெரிந்து விடும்.

TNPL 2025

லீக் சுற்று முடிவில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது. இதேபோன்று இரண்டாவது இடத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி இருக்கின்றது. விளையாடிய 6 போட்டிகளில் நான்கு வெற்றி இரண்டு தோல்விஎன எட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மூன்றாம் இடத்தில் திண்டுக்கல் டிராகன் அணி இருக்கின்றது. விளையாடிய 6 போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்வி என எட்டு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. நாளை திருப்பூர், நெல்லை அணியும், திண்டுக்கல், திருச்சி அணியும் பல பரிட்சை நடத்துகிறது. இதில் இரண்டாவது இடத்தை திருப்பூர் அணி பிடிக்க வேண்டும் என்றால் நாளை ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.

திண்டுக்கல் அணி திருப்பூர் அணியை விட ரன் ரேட் குறைவாக இருப்பதால் திருப்பூர் தோற்றால் மட்டுமே திண்டுக்கல் அணியினர் இரண்டாவது இடத்தை வெற்றி பெற்று பிடிக்க முடியும். இந்த சூழலில் நான்காவது இடத்தில் யார் இருக்கப் போகிறார்கள் என்பது தான் தற்போது கேள்வியாக இருக்கின்றது.

சேலம் அணியும் கோவை அணியும் தற்போது பலப்பரிட்சை நடத்தி வருகிறது. இதில் சேலம் வெற்றி பெற்றால் நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு எட்டு புள்ளிகள் உடன் தகுதி பெற்று விடும். ஒருவேளை சேலம் அணி இன்று தோல்வியை தழுவினால், திருச்சி அணிக்கும் நெல்லை அணிக்கும் வாய்ப்பு ஏற்படும். இதில் திருச்சி அணியின் ரன் ரேட் அதிகமாக இருப்பதால் நாளை அவர்கள் திண்டுக்கல் அணியுடன் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். ஆனால் இன்றைய ஆட்டத்தில் சேலம் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த இரண்டு போட்டியும் சமீபிரதாய ஆட்டமாக தான் இருக்கும்.

Story first published: Saturday, June 28, 2025, 21:56 [IST]
Other articles published on Jun 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+