Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

TNPL 2025 தொடரின் 8 அணிகள் வீரர்கள் விவரம்.. எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்

கோவை: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் ஒன்பதாவது சீசன் ஜூன் 5 தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 28 லீக் ஆட்டம், இறுதிப் போட்டி உள்பட 4 பிளே ஆப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள நான்கு மைதானங்களில் நடைபெறுகிறது.

கோயம்புத்தூர் SNR கல்லூரி கிரிக்கெட் மைதானம், சேலம் SCF கிரிக்கெட் மைதானம், திருநெல்வேலி இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானம் மற்றும் திண்டுக்கல் NPR கல்லூரி மைதானம் ஆகியவற்றில் நடைபெற உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டி20 தொடர் நடைபெற்றாலும், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தான் பிரபலமானது. இது பல ஆண்டுகளாக ஐபிஎல் அணிகளுக்கு பல வீரர்களை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், டிஎன்பிஎல் தொடரில் விளையாடும் அணிகளின் வீரர்கள் விவரத்தை தற்போது பார்க்கலாம்.

TNPL 2025

SKM சேலம் ஸ்பார்டன்ஸ் அணி
அபிஷேக் செல்வகுமார், பூபதி குமார், ஹரி நிஷாந்த், விவேக் ஆர், சுதன் கந்தேபன், ஜே கவுரி சங்கர், நிதிஷ் ராஜகோபால், பவித்ரன் ஆர், எஸ் ஹரிஷ் குமார், சன்னி சந்து, ஈஸ்வர் எம், ஆர் கவின், கார்த்திக் மணிகண்டன், முகமது எம், எம் பொய்யாமொழி, ரஹில் ஷா, ராகுல் டி, எஸ் அஜித் ராம், யாழ் அருண் மொழி, ஹிமாலயா.

சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி
என்எஸ் சதுர்வேத், ஷ்யாம் சுந்தர் எஸ், சஞ்சீவ் குமார், ராம் அரவிந்த், பால்சந்தர் அனிருத், பி சரவணன், அதீக் உர் ரஹ்மான், சி சரத் குமார், பி விக்னேஷ், எஸ் ராஜலிங்கம், அஜய் சேத்தன் ஜே, கணேஷ் எஸ், ஷங்கர் கணேஷ், முருகன் அஷ்வின், கவுதம் தாமரை கண்ணன், குர்ஜப்னீத் சிங், கார்த்திக் மெய்யப்பன், தீபேஷ் டி, சூர்யா ஆனந்த் எஸ், அயுஷ் எம்.

திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி
யு முகிலேஷ், ஜகதீசன் கவுசிக், ஜாஃபர் ஜமால், சுரேஷ் குமார், ஆர்யா யோஹன் மேனன், கே ஈஸ்வரன், எஸ்பி வினோத், சுஜய் சிவசங்கரன், சஞ்சய் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஆர் ராஜ்குமார், டி சரண், வசீம் அகமது, ஆன்டனி தாஸ, எம் கணேஷ் மூர்த்தி, வி அதிசயராஜ் டேவிட்சன், ஜே ரெஜின், பி சரவண குமார், என் செல்வகுமாரன்.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி
பிஎஸ் நிர்மல் குமார், எஸ் விஜய குமார், சச்சின் ரதி, ராக்கி பாஸ்கர், சோனு யாதவ், அஜய் கிருஷ்ணன், இம்மானுவேல் செரியன், ஜே ரோஹன், முகமது அத்னான் கான், அஜிதேஷ் குருஸ்வாமி, டி சந்தோஷ் குமார், அருண் கார்த்திக், ரிதிக் ஈஸ்வரன், என்எஸ் ஹரிஷ், வள்ளியப்பன் யுதீஸ்வரன், செல்வகணபதி எஸ், எஸ் ரிஷீக் குமார், கரண் சம்பத், அருண் பாலா, அதிஷ் எஸ் ஆர்.

லைகா கோவை கிங்ஸ் அணி
ஆன்ட்ரே சித்தார்த், பாலசுப்ரமணியம் சச்சின், ஜிதேந்திர குமார், கே விஷால் வைத்யா, சாய் சுதர்சன், ஷாருக்கான், பி விட்யூத், பிரதீப் விஷால், ராமலிங்கம் ரோஹித், மாதவ பிரசாத், சுரேஷ் லோகேஷ்வர், அம்ப்ரிஷ் ஆர் எஸ், பி ஆதித்யா, கோவிந்த் ஜி, குரு ராகவேந்திரன், ஜாதவேத் சுப்ரமண்யன், எம் சித்தார்த், என் கபிலன், பி புவனேஸ்வரன், ரமேஷ் திவாகர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி
மான் பாஃப்னா, ஆர் கே ஜயந்த், ஷிவம் சிங், விமல் குமார், தினேஷ் எச், ஹன்னி சைனி, எம் கார்த்திக் சரண், ரவிச்சந்திரன் அஷ்வின், பாபா இந்திரஜித், அத்துல் விட்கர், டிடி சந்திரசேகர், கணேசன் பெரியசாமி, எம் விஜு அருள், ராஜ்விந்தர் சிங், சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி
விஜய் ஷங்கர், ஆஷிக் ரெஹ்மான், அர்ஜுன் மூர்த்தி, அபிஷேக் தன்வர், பாபா அபராஜித், என் சுனில் கிருஷ்ணா, தினேஷ் ராஜ் எஸ், கிருபாகர் ரவீந்தர், பிரேம் குமார், ராஜலிங்கம் ஜி, ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், ஸ்வப்னில் சிங், ஜகதீசன் நாராயண், ஆர் ராஜன், அக்ரம் கான், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆர், எம் சிலம்பரசன், ரோஹித் சுதர், டிடி லோகேஷ் ராஜ்.

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி
கே ராஜ்குமார், கனிபாலன் கே, ராதாகிருஷ்ணன், உதிரசாமி சசிதேவ், சி வி அச்சுத், டேரில் ஃபெராரியோ, பிரபஞ்சன் எஸ், வி அனோவன்கர், அமித் சத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால், துஷார் ராஹேஜா, பாலு சூர்யா, இசக்கிமுத்து ஏ, மதிவண்ணன் எம், முகமது அலி, மோகன் பிரசாத், பிரனவ் ராகவேந்திரா, ரகுபதி சிலம்பரசன், சாய் கிஷோர், டி நடராஜன்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025-ஐ எங்கு நேரடியாக பார்க்கலாம்?
தமிழ்நாடு பிரீமியர் லீக் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மேலும், இது ஃபேன்கோடு (Fancode) இணையதளத்தில் மற்றும் ஆப்பில் பார்க்கலாம்.

Story first published: Thursday, June 5, 2025, 15:06 [IST]
Other articles published on Jun 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+