Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழ்நாடு கிரிக்கெட் லீக் ஏலம்: கோவை அணியில் முரளி விஜய், திண்டுக்கல் அணிக்கு அஸ்வின் தேர்வு!

சென்னை: தமிழகம் முழுவதிலுமிருந்து 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, திண்டுக்கல் (நத்தம்), திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் ஆகஸ்ட் 27 முதல் நடைபெற உள்ளன. பகல் இரவு ஆட்டமாக மொத்தம் 31 போட்டிகள் நடைபெறும்.

இதற்கான ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. ஆர்.அஸ்வின் திண்டுக்கல் அணிக்கும், தினேஷ் கார்த்திக் தூத்துக்குடி அணிக்கும், முரளி விஜய் கோவை அணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

TNPL auction: murali Vijay will play for Coimbatore

இதுவரை நடைபெற்ற ஏலத்தில் தேர்வான வீரர்கள் விவரம்:

சேப்பாக்கம் கில்லி - ஆர். சதீஷ், யோமகேஷ், தலைவன் சற்குணம், ஆண்டனி தாஸ், கோபிநாத், சசிதேவ், ஜோயல் ஜோசப், ராகுல், வசந்த சரவணன், அலெக்ஸாண்டர், தமிழ் குமரன்.

காஞ்சிபுரம் - இந்திரஜித் பாபா, கெளசிக், ஜேசுராஜ், ஷாருக் கான், பரத் சங்கர், பிரதிபன், வருண் குமார், எம். பிரபு, சித்தார்த் சிவா, ஆதித்ய கணேஷ், எல். கணேஷ், ஜே. கெளசிக்

திருவள்ளூர் - அபரஜித் பாபா, அபிஷேக் தன்வர், ரஹில் ஷா, ஆர். கவின், சதுர்வேத், மலோலன் ரங்கராஜன், ரோஹித், ஜெகன்னாத் ஸ்ரீனிவாஸ், சம்ருத் பட், அருண், சஞ்சய் யாதவ், ஜிவி விக்னேஷ்

கோவை - முரளி விஜய், சையத் முகமது, எம். முகமது, சூர்யபிரகாஷ், விஜய் சங்கர், ரோஹித், கே. விக்னேஷ், அக்‌ஷய் வி சீனிவாசன், ஹரிஷ் குமார், அஜித் ராம், அனிருத் சீதாராம்

தூத்துக்குடி - தினேஷ் கார்த்திக், எல். பாலாஜி, வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் கிரிஸ்ட், அபினவ் முகுந்த், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், ஆனந்த் சுப்ரமணியன், கணேஷ் மூர்த்தி, சுஷில், சத்யநாராயண், ஆகாஷ்

மதுரை - அருண் கார்த்திக், சுரேஷ் குமார், எஸ். தியாகராஜன், பிரான்சிஸ், சந்திரசேகர், ராஜா, சிஜித் சந்திரன், விவேக், முருகானந்தம், பாஃவ்னா, எல். விக்னேஷ்

திண்டுக்கல் - அஸ்வின், எம். அஸ்வின், எஸ். நடராஜன், எம்.எஸ். சஞ்சய், ஜெகதீசன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சுப்ரமணிய சிவா, சன்னி குமார் சிங், ஷ்யாம் சுந்தர், அஸ்வின் வெங்கட்ராமன், வில்கின்ஸ் விக்டர், முகுந்த்

காரைக்குடி - பத்ரிநாத், அனிருதா ஸ்ரீகாந்த், சுனில் சாம், சுரேஷ் பாபு, லோகேஷ்வர், கணபதி சந்திரசேகர், சோயிப் எம்.டி. கான், விஷால் வைத்யா, எம். விஜய்குமார், மோகன் பிரசாத், ராஜ்குமார், சோனு யாதவ்.

இறுதிப் போட்டியில் வெற்றிப் பெறும் அணிக்கு ரூ. 1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சம், 3 மற்றும் 4வது இடங்களுக்கு தலா ரூ.40 லட்சம், அடுத்த நிலையில் உள்ள 4 அணிகளுக்கு தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.3.40 கோடிக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

Story first published: Saturday, July 30, 2016, 13:33 [IST]
Other articles published on Jul 30, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+