Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: கமலை சந்தித்து வாழ்த்து பெற்ற கோவை வீரர்கள்.. முரளி விஜயுடன் சாட்டிங்

சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் ஆடும் கோவை அணியினர் நடிகர் கமல் ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

டிஎன்பிஎல் என அழைக்கப்படும் இத்தொடரில் சேப்பாக்கம், மதுரை, கோவை, தூத்துக்குடி, திண்டுக்கல், காரைக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய அணிகள் ஆடுகின்றன.

TNPL: Kovai team mates met Kamal Hassan

ஒவ்வொரு அணியிலும் முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கோவை அணியில் இந்திய டெஸ்ட் ஓபனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய் இடம் பிடித்துள்ளார்.


இந்நிலையில், கோவை அணி நேற்று காஞ்சியை சந்தித்தது., முன்னதாக சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து கோவை அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். முரளி விஜயுடன் கமல் உரையாற்றுவது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.

டிஎன்பிஎல் என அழைக்கப்படும் இத்தொடரில் சேப்பாக்கம், மதுரை, கோவை, தூத்துக்குடி, திண்டுக்கல், காரைக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய அணிகள் ஆடுகின்றன.

ஒவ்வொரு அணியிலும் முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கோவை அணியில் இந்திய டெஸ்ட் ஓபனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய் இடம் பிடித்துள்ளார்.

கோவை அணிக்கு லைகா நிறுவனம் முக்கிய ஸ்பான்சராகும். கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு திரைப்படத்தையும், ராஜ்கமல் நிறுவநத்தோடு இணைந்து லைகா தயாரிக்கிறது. எனவே அணிக்கும், படத்திற்கும் புரமோஷன் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இந்த சந்திப்புக்கு லைகா ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

நம்ம ஊரு, நம்ம கெத்து.. என்ற கோஷத்தோடு ஒளிபரப்பாகும் டிஎன்பிஎல் விளம்பரத்தில், தமிழக சிறப்புகளை காண்பிக்கும் காட்சியில், கமலின் பிரமாண்ட கட்அவுட்டும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 27, 2016, 10:17 [IST]
Other articles published on Aug 27, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+