போன வருஷம் ஆடிய ஆட்டமென்ன.. டிஎன்பிஎல் லீக்.. பிளாஷ்பேக் 2017
சென்னை: டிஎன்பிஎல் மூன்றாவது சீசன் இன்று கோலாகலமாக துவங்குகிறது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், ஐபில் போட்டிகள் மற்றும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் வீரர்கள் போட்டி போட்டுகொண்டு தனது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள்.
இப்போட்டிகள் தமிழக வீரர்களின் திறமையை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இந்த ஆண்டும் சிறப்பான பங்களிப்பை அளிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதிக ரன்கள் குவித்தவர்கள் - 2017
- வாஷிங்டன் சுந்தர் - டூடி பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கிய சுந்தர் 459 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.
- கவுசிக் காந்தி - இவரும் டூடி பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 297 ரன்களை குவித்து இரண்டாமிடம் பெற்றார்.
- அனிருதா - காரைக்குடி காளை அணிக்காக களமிறங்கிய இவர் 287 ரன்களை குவித்து மூன்றாமிடம் பிடித்தார்.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் - 2017
- சாய் கிஷோர் - சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்காக களமிறங்கிய இவர் 17 விக்கெட்களை வீழ்த்தி முதல் இடம் பிடித்தார்.
- வாஷிங்டன் சுந்தர் - டூடி பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கிய சுந்தர் 15 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாமிடம் பிடித்தார். இவர் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- அதிசயராஜ் டேவிட்சன் - டூடி பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கிய இவரும் 15விக்கெட்களை வீழ்த்தி இரண்டாம் இடத்தை சுந்தருடன் பகிர்ந்து கொண்டார்.

Story first published: Wednesday, July 11, 2018, 16:01 [IST]
Other articles published on Jul 11, 2018


Click it and Unblock the Notifications