Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கருணாநிதிக்காக ஒத்திவைக்கப்பட்டன.. டிஎன்பிஎல் பிளே ஆப் போட்டிகள்.. இன்று நடக்கின்றன!

Recommended Video

கருணாநிதிக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎல்- வீடியோ

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால், கடந்த இரண்டு நாட்களில் நடக்க வேண்டிய டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. அந்தப் போட்டிகள் இன்று நடக்கின்றன.

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் நடக்கிறது. இதில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் துவங்குவதாக இருந்தது.

TNPL play off matches scheduled for today

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடக்கவிருந்த பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.

தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்

திருநெல்வேலியில் நடப்பதாக இருந்த அந்த இரண்டு ஆட்டங்களும் திண்டுக்கல்லில் இன்று நடக்கிறது.

அதன்படி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள், முதல் குவாலிபையர் ஆட்டத்தில் விளையாடுகின்றன.

புள்ளி பட்டியல்

புள்ளிப் பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்த கோவை மற்றும் காரைக்குடி அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதுகின்றன.

முதல் குவாலிபையர் ஆட்டம் 3.15 மணிக்கும், எலிமினேட்டர் ஆட்டம் இரவு 7.15 மணிக்கும் நடக்க உள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

10ம் தேதி நடக்கும் 2வது குவாலிபையர் ஆட்டத்தில் முதல் குவாலிபையரில் தோற்கும் அணியும் எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியும் மோதும். இந்தப் போட்டி மற்றும் 12ம் தேதி நடக்கும் பைனல் போட்டிகளில் எந்த மாற்றமும் இல்லை.

Story first published: Thursday, August 9, 2018, 10:40 [IST]
Other articles published on Aug 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+