டிஎன்பில் சீசன் 3 - கோப்பையை வெல்லப்போகும் அணி எது ?
சென்னை : டிஎன்பில் சீசன் 3 போட்டிகள் தற்போது இறுதி கட்டடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதவுள்ளன.
முதலாவது குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் அணி மதுரையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது குவாலிபையர் போட்டியில் மதுரை அணி கோவை லைக்கா கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இரு அணிகளும் டிஎன்பில் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

டிஎன்பில் வரலாற்றில் மதுரை அணி இதுவரை ஒரு போட்டியில் கூட திண்டுக்கல் அணியை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 4 போட்டிகளில் இரண்டு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அனைத்து போட்டிகளிலும் திண்டுக்கல் அணியே வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரில் இதுவரை இரண்டு முறை மோதியுள்ளன. இரண்டு போட்டிகளிலும் திண்டுக்கல் வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றை மாற்றி அமைக்குமா மதுரை. திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வெற்றி கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இறுதி போட்டி இன்று இரவு 7:15 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
Story first published: Sunday, August 12, 2018, 12:33 [IST]
Other articles published on Aug 12, 2018


Click it and Unblock the Notifications