டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் நாளை தொடக்கம்.. 8 அணிகள் மோதல்.. நட்சத்திர விரர்கள் யார்? முழு விவரம்
சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் நாளை முதல் தொடங்கி வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராய்ல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி வாரியர் திருச்சி, மதுரை பாந்தர்ஸ்,சேலம் ஸ்பார்ட்ன்ஸ், லைகா கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் இந்த தொடரில் விளையாடுகிறது.
திருநெல்வேலி, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய நான்கு ஊர்களில் போட்டி நடைபெறுகிறது.

லீக் சுற்று
சென்னை சேப்பாக்கம் மைதானம் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதால் , அங்கு போட்டிகள் நடைபெறவில்லை. ரவுண்ட் ராபின் முறைப்படி ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் ஒரு முறை மோதும். ஒவ்வொரு அணிகளும் 7 முறை மோதும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும்

நட்சத்திர வீரர்கள்
ஒவ்வொரு இரவும் 7.15 மணிக்கு போட்டி தொடங்கும். மதியம் போட்டிகள் 3.15 மணிக்கு தொடங்கும். திருப்பூர் அணியில் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக், திண்டுக்கல் அணியில் ரவிசந்திர அஸ்வினும், ராஜகோபால் சதிஷ், சாய் கிஷோர், ஜெகதீசன் ஆகியோர் சேப்பாக்கம் அணியிலும் விளையாடுகின்றனர்.

யார் எந்த அணியில்?
நெல்லை அணியில் பாபா இந்தரஜித், பாபா அப்ரஜித் ஆகிய வீரர்களும் விளையாடுகின்றனர். வருண் சக்ரவர்த்தி மதுரை அணியிலும், விஜய் சங்கர், வாசிங்டன் சுந்தர் சேலம் அணியிலும், ஷாரூக்கான், நடராஜன் சாய் சுதர்சன் கோவை அணியிலும் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த தொடர் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எந்த சேனல்?
முதல் போட்டி - 3 முறை சாம்பியன் சேப்பாக் Vs நெல்லை
இடம் மற்றும் நேரம்- நெல்லை, 7.15 மணி
சேனல்- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,2, தமிழ்
டிஜிட்டல்/ ஓடிடி - வுட் ஆப் ( இலவசம்)


Click it and Unblock the Notifications