கிரிக்கெட்டுக்கு திரும்பிய முரளி விஜய் ஏமாற்றம்.. திண்டுக்கல்லை சொல்லி அடித்த திருச்சி
நெல்லை: டிஎன்பிஎல் தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல், திருச்சி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி கேப்டன் நிஷாந்த் 25 ரன்கள் எடுத்தார். மணி பாரதி 18 ரன்களும் விசால் வைத்யா 16 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் விக்னேஷ் 32 ரன்களும், மோனிஷ் 24 ரன்களும் எடுத்தனர். பின்வரிசை வீரர்கள் சொதப்பியதால் திண்டுக்கல் அணி 144 ரன்களுக்கு 8 விக்கெட் என்ற ஸ்கோர் மட்டுமே எடுத்தது.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய முரளி விஜய் 13 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவமாக ரன் அவுட் ஆகினார். இதனையடுத்து ராஜகோபால், கனேஷ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
ராஜகோபால் 48 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். 6 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். கனேஷ் 38 பந்துகளில் 37 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 19 ஓவர் முடிவில் திருச்சி அணி 147 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.


Click it and Unblock the Notifications