Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

TNPL சீசன் 8 இன்று தொடக்கம்.. எந்த சேனல், ஆன்லைனில் பார்க்கலாமா?

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8வது சீஸன் இன்று ஜூலை 5ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது. இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதுகின்றன. இந்த தொடர் சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய 5 இடங்களில் நடைபெறுகிறது. ஜூலை 5ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையிலான இந்த தொடரில் ப்ளேஆஃப்ஸ் மற்றும் இறுதிப்போட்டி உட்பட மொத்தம் 32 போட்டிகள் நடைபெறுகிறது,

முதல் Leg போட்டிகள் சேலத்தில் ஜூலை 5 முதல் 11ஆம் தேதி வரையும் இரண்டாவது Leg கோயம்புத்தூரில் ஜூலை 13 முதல் 18ஆம் தேதி வரையும் மூன்றாவது Leg போட்டிகள் திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் 24ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. இதில் கடைசி Leg போட்டிகள் திண்டுக்கல்லில் ஜூலை 26 முதல் 28 வரை நடைபெறுவதோடு 2024 சீஸனின் முதல் 2 ப்ளேஆஃப்ஸ் போட்டிகளான குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் முறையே ஜூலை 30 மற்றும் 31ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. இதில் 2024 சீஸனின் குவாலிஃபையர் 2(ஆகஸ்ட் 2) மற்றும் இறுதிப்போட்டி (ஆகஸ்ட் 4) சென்னை சேப்பாக்கத்தில் 2021ஆம் ஆண்டிற்குப்பின் மீண்டும் நடைபெறவுள்ளது

tnpl

ஒவ்வொரு போட்டிகளும் இரவு 7.15 மணிக்கும் டபுள் ஹெட்டர் போட்டிகள் இருக்கும் சமயத்தில் பிற்பகல் 3.15 மணிக்கும் போட்டிகள் நடத்தப்படும். மொத்தமாக இந்த சீஸனில் 7 டபுள் ஹெட்டர் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் ப்ளேஆஃப்ஸ் போட்டியின் போது மழையால் ஆட்டம் குறுக்கிட்டால் ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும் நடைமுறை சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் பின்பற்றப்படும்.ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். டி.என்.பி.எல் 2024சீஸனிலுள்ள 8அணிகளும் லீக் கட்டத்தில் ஒருமுறை நேருக்கு நேர் மோதுவார்கள். லீக் சுற்றின் முடிவில் முதல் 4இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் டி.என்.பி.எல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் என்ற சாதனையை சாய் கிஷோர் மற்றும் சஞ்சய் யாதவ் (22 இலட்சம்) படைத்தனர். இதற்கு முன் 2023ஆம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற ஏலத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி அதிகபட்சமாக 21.60 லட்சங்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனை வாங்கியது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சீகம் மதுரை பேந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றனர்.இதுவரை நடந்து முடிந்த 7 சீஸன்களில் சேப்பாக்கம் அணி 2017, 2019 ,2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.2023ஆம் ஆண்டின் டி.என்.பி.எல் பட்டத்தை தொடர்ச்சியாக 2வது முறை கைப்பற்றிய கோவை கிங்ஸ் அணி இம்முறை ஹாட்ரிக் பட்டத்தை குறிவைத்து களமிறங்கவுள்ளது

தொலைக்காட்சி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD சேனல்கள்

டிஜிட்டல் ஒளிபரப்பு: ஃபேன்கோடு (FANCODE)

Story first published: Friday, July 5, 2024, 13:36 [IST]
Other articles published on Jul 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+