Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டிக்கெட் எங்கு கிடைக்கும்? என்ன விலை தெரியுமா?

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் எங்கு கிடைக்கும், டிக்கெட் விலை என்ன என்பது குறித்து தெரியுமா?

சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகள் சென்னை, திண்டுக்கல் நத்தம், நெல்லை ஆகிய 3 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெறும்.

TNPL tickets available in Bookmyshow website

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடக்க ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. ஆட்டம் துவங்குவதற்கு முன் பிரபல திரை நட்சத்திரங்கள் பங்கு கொள்ளும் வண்ணமயமான தொடக்க விழா நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டரில் தொடங்கியது. சென்னையில் 24, 26ம் தேதிகளில் நடக்கும் முதல் 2 ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி கொள்ளலாம். காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். ரூ.50, ரூ.100 என இரு விலைகளில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஆகஸ்ட் 25, 27, 28, 29 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை நத்தம் என்.பி.ஆர். கல்லூரியின் திண்டுக்கல் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மேலும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை www.bookmyshow.com இணையதளத்தின் வாயிலாகவும் வாங்க முடியும்.

Story first published: Wednesday, August 24, 2016, 11:28 [IST]
Other articles published on Aug 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+