Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி பற்றி டிஎன்பிஎஸ்சி-யில் கேட்கப்பட்ட அந்த கேள்வி.. புரியாமல் தலையை சொறிந்த பலர்.. பதில் இதுதான்!

Recommended Video

தோனி பற்றி டிஎன்பிஎஸ்சி-யில் கேட்கப்பட்ட அந்த கேள்வி

சென்னை : தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தோனி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பலரும் விடை தெரியாமல் விழித்துள்ளனர்.

தேர்வு முடிந்த பின் அந்த கேள்வியை பற்றி அவர்கள் மற்றவர்களிடம் கேட்க, அந்த தோனி கேள்வி இணையத்தில் பரவி வருகிறது.

தோனியின் சராசரி பற்றிய அந்த கேள்வி தவிர, மற்றொரு கிரிக்கெட் சார்ந்த கேள்வியும் அந்த தேர்வில் கேட்கப்பட்டு இருக்கிறது.

கூகுளில் வலம் வரும் கேள்வி

கூகுளில் வலம் வரும் கேள்வி

சுமார் 15 லட்சம் மக்கள் இந்த தேர்வை எழுதி உள்ளனர். அவர்களில் பலர் அந்த தோனி கேள்விக்கான பதிலை தேடி வருகிறார்கள். அவர்கள் தேடித் தேடியே கூகுளில் அந்த கேள்வி டிரெண்டிங் ஆகிவிட்டது. அப்படி என்ன தாங்க கேள்வி?

தோனி சராசரி

தோனி சராசரி

அந்த கேள்வி - தோனி 30 போட்டிகளில் 72 ரன்கள் சராசரி வைத்துள்ளார். 31வது போட்டிக்குப் பின் அவர் சராசரி 73ஆக உயர்ந்தது. அப்படி என்றால் அவர் 31வது போட்டியில் எத்தனை ரன்கள் சேர்த்தார்? இதற்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு இருந்தது -

1) 100

2) 103

3) 74

4) 108

சராசரி என்ன?

சராசரி என்ன?

தோனி 30 போட்டிகளில் 72 ரன்கள் சராசரி வைத்துள்ளார் என்றால் அவர் 2160 ரன்கள் (30 x 72) அடித்து இருந்தார். 31வது போட்டிக்கு பின் அவர் சராசரி 73 என்றால், அவர் 31 x 73 = 2263 ரன்கள் அடித்துள்ளார்.

விடை இதுதான்

விடை இதுதான்

அப்படி என்றால் அவர் அடித்த ரன்கள் 103 ஆகும். (2263 - 2160). இது சாதாரண கணக்கு பாட கேள்வி தான். ஆனாலும், கிரிக்கெட்டில் ரன் சராசரி என்றால் என்ன? என்பது தெரிந்தால் மட்டுமே கேள்வியை புரிந்து கொள்ள முடியும்.

மற்றொரு கிரிக்கெட் கேள்வி

மற்றொரு கிரிக்கெட் கேள்வி

மற்றொரு சுவாரசியமான கிரிக்கெட் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. ஒருநாள் போட்டிகளில் நோ பால், வைடுகள், எக்ஸ்ட்ராஸ், ஓவர்த்ரோ இதெல்லாம் இல்லாமல், ஒரு பேட்ஸ்மேன் அதிகபட்சம் எத்தனை ரன்கள் அடிக்க முடியும்? அதற்கான விடைகள் -

1) 1800

2) 1650

3) 1653

4) 1550

5) 1555

6) 1506

1800 தானே?

1800 தானே?

ஒருநாள் போட்டிகளுக்கு 50 ஓவர்கள். 300 பந்துகள். ஒரு பந்தில் அதிகபட்சம் ஆறு ரன்கள் அடிக்கலாம். அப்படி என்றால் 300 x 6 = 1800. அரைகுறையாக கிரிக்கெட் தெரிந்த பலர் இப்படி தான் தவறான விடையை தேர்வு செய்து இருப்பார்கள். ஆனால், இதற்கு விடை வேறு.

ஓவர் முடிவில் ஒரு ரன்

ஓவர் முடிவில் ஒரு ரன்

ஒரே பேட்ஸ்மேன் 50 ஓவரும் பேட்டிங் செய்தால் தான் அதிகபட்ச ரன்களை அவரால் எட்ட முடியும். அதற்கு ஓவர் முடிவில் அவர் ரன் ஓடி எதிர்முனைக்கு செல்ல வேண்டும். அதிலும் அதிகபட்ச ரன்களாக அவர் 3 ரன்கள் ஓடலாம்.

இது தான் விடை

இது தான் விடை

ஒவொரு ஓவரின் கடைசி பந்து போக மீதமுள்ள 5 பந்துகளில் சிக்ஸ் அடிக்க முடியும். அப்படி என்றால் 49 ஓவர்கள் வரை அவரால் ஓவருக்கு 30 + 3 = 33 ரன்கள் சேர்க்க முடியும். 49 ஓவர்களில் 33 x 49 = 1617 ரன்கள் சேர்க்க முடியும். கடைசி 50வது ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்ஸ் அடிக்கலாம். ஓவர் முடிவில் அவர் ரன் ஓட வேண்டாம். மொத்தமாக 1617 + 36 = 1653 ரன்கள் சேர்க்க முடியும். விடை அது தான்.

கிரிக்கெட் அவசியம்

கிரிக்கெட் அவசியம்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கும் கிரிக்கெட் அறிவு அவசியம் என்ற நிலையை தான் இது குறிக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியையும் பார்க்காவிட்டாலும், கிரிக்கெட்டையும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் மக்களே!

Story first published: Thursday, September 5, 2019, 21:45 [IST]
Other articles published on Sep 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+