உலக கோப்பையை தூக்கிய உடன்.. ஹர்திக் போட்ட முதல் வீடியோ கால் யாருக்கு! புதிர் போடும் நெட்டிசன்கள்
பார்படாஸ்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், அதன் பிறகு அனைத்து வீரர்களும் எமோஷனல் ஆனார்கள்.. அப்போது ஹர்திக் பாண்டியாவும் கண்ணீர் விட்டார். தொடர்ந்து அவர் பிட்சில் உட்கார்ந்து யாருடனோ வீடியோ கால் பேசிக் கொண்டு இருந்தார்.
உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டி பார்படாஸில் நேற்று நடைபெற்றது. அதில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய நிலையில், முதலில் பேட் செய்த இந்தியா 176 ரன்களை எடுத்தது.

அடுத்து 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹர்திக்: இந்த உலகக் கோப்பையில் இந்தியா வெல்ல ஹர்திக் பாண்டியாவின் அபார பந்துவீச்சு முக்கிய காரணம். இதை யாராலும் மறுக்கவே முடியாது. பார்படாஸில் நேற்றிரவு நடந்த போட்டியில் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவுக்கு 16 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய ஹர்திக் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது அதன் பிறகு 11 ஆண்டுகள் கழித்து இப்போது இந்தியா அடுத்த ஐசிசி டிராபியை வென்றுள்ளது.
வீடியோ கால்: கடைசி ஓவரை அபாரமாக வீசிய ஹர்திக் அதன் பிறகு எமோஷனலாகி கண்ணீர்விட்டார். அவர் மட்டுமின்றி வெற்றிக்குப் பிறகு அனைத்து வீரர்களுமே எமேஷனலாகவே இருந்தனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான போட்டோ, வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அப்படி இணையத்தில் பரவிய சில போட்டோக்களில், ஹர்திக் பாண்டியா பிட்ச்சில் அமர்ந்து வீடியோ காலில் பேசுவது போன்ற போட்டோக்களும் இருக்கிறது.
மனைவி: இதுவே இப்போது இணையத்தில் பேசுபொருள் ஆகி இருக்கிறது. அவர் யாருடன் வீடியோ காலில் பேசி இருப்பார் என்றே இணையத்தில் பலரும் விவாதித்து வருகிறார்கள். ஒரு சிலர் அவர் தனது மனைவி நடாஷா உடன் பேசி இருக்கலாம் என்கிறார்கள். ஆனால், அதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள். ஏனென்றால் நடாஷாவுக்கும் ஹர்திக்கிற்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகவே சில மாதங்களாகவே தகவல் பரவி வருகிறது.
நடாஷாவும் ஹர்திக்கும் இடையே கடந்த 2020 மே 31ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.. அதே ஆண்டு ஜூலை 30 அன்று அகஸ்தியா என்ற மகனை அவர்கள் பெற்றெடுத்தனர். கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
யாராக இருக்கும்: இருப்பினும், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து இருப்பதாகவே கூறப்படுகிறது. அதற்கேற்றார் போலவே நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் உடன் இருக்கும் அனைத்து போட்டோக்களையும் நீக்கிவிட்டார். அதேபோல வழக்கமாக ஐபிஎல் தொடரில் அவர் ஹர்திக் பாண்டியாவுக்கு சப்போர்ட் செய்ய அனைத்து போட்டிகளிலும் மைதானத்திற்கு வருவார். ஆனால், இந்த முறை ஒரு போட்டியின் போது கூட அவர் வரவில்லை. இதையெல்லாம் வைத்தே இருவரும் பிரிந்து இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.
இதனால் ஹர்திக் நிச்சயம் நடாஷாவுடன் வீடியோ கால் பேசி இருக்க மாட்டார் என்றே பலரும் கூறி வருகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் ஹர்திக் தனது யார் அல்லது அவரது சகோதரர் கிரிக்கெட் க்ருனால் பாண்டியா உடன் பேசி இருக்கலாம் எனக் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications