Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 3 ஆஷஸ் போட்டிகள்.. காயத்தால் நேதன் லயன் விலகல்.. சரியான மாற்று வீரரை பிடித்த ஆஸ்திரேலியா!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி 3 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த நேதன் லயனுக்கு பதிலாக டாட் மர்ஃபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 43 வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றியை பெற்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.

Todd Murphy replaces injured Nathan Lyon for the Last 3 Matches of the Ashes 2023

இதனைத் தொடர்ந்து ஜூலை 6ஆம் லீட்ஸ் மைதானத்தில் 3வது ஆஷஸ்ட் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் 2வது போட்டியின் போது காயமடைந்த நேதன் லயனுக்கு பதிலாக எந்த வீரர் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடைசி 3 போட்டிகளுக்கு இடையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காயமடைந்த நேதன் லயனுக்கு பதிலாக டாட் மர்ஃபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான டாட் மர்ஃபி 4 போட்டிகளில் விளையாடி 14 விராட் கோலியின் விக்கெட் உட்பட 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதேபோல் 2வது டெஸ்ட் போட்டியில் நேதன் லயனுக்கு பதிலாக ஃபீல்டிங்கில் களமிறக்கப்பட்ட மேட் ரென்ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்த், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், டாட் மர்ஃபி, மைக்கேல் நசீர், ஜிம்மி பெயர்சன் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

Story first published: Monday, July 3, 2023, 20:40 [IST]
Other articles published on Jul 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+