Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘தல’க்கு நாளை பர்த்டே… வீடியோ வெளியிட்டு கவுரவப்படுத்திய ஐசிசி…!! தோனி பெயரல்ல.. அது ஒரு மரபு

லண்டன்: தல தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு ஐசிசி வீடியோ வெளியிட்டு கவுரவப் படுத்தி இருக்கிறது.

ஜூலை 7ம் தேதி... இந்திய கிரிக்கெட் வீரர், முன்னாள் கேப்டன் தல தோனிக்கு பிறந்தநாள். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இப்போது கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டனர்.

தோனியை கவுரப்படுத்தும்விதமாக ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. ரசிகர்கள், மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள், இந்திய வீரர்கள் என பலரும் தோனி பற்றி கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

தோனி பெயர் அல்ல

தோனி பெயர் அல்ல

அந்த வீடியோவில் தோனி பற்றி தலைப்பு ஒன்றை ஐசிசி வைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி என்பது வெறும் பெயர் கிடையாது. இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய பெயர் அது. உலகளவில் பலருக்கும் உதாரணமாக விளங்கியவர். மறுக்க முடியாத மரபு கொண்ட பெயர் என்ற தலைப்புடன் ஐசிசி பகிர்ந்துள்ளது.

ஐசிசி வீடியோ

ஐசிசி வெளியிட்ட இந்த வீடியோவில் பலரும் நினைவலைகளை பகிர்ந்துள்ளனர். அதில் கோலி பேசியிருப்பதாவது: தோனி எப்பொழுதும் கூலாகவே இருப்பார். அந்த அமைதி தான், கடினமான தருணங்களில் மிகச் சரியாக முடிவுகளை எடுக்க வைக்கிறது.

எனது கேப்டன்

எனது கேப்டன்

அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். நான் அணிக்குள் வரும் போது தோனி தான் என் கேப்டன். இன்று மட்டுமல்ல... எனக்குள் அவர் என்றுமே கேப்டனாகவே இருக்கிறார். அவருடன் இருப்பது இலகுவாக எங்களை உணர வைக்கும்.

நம்பிக்கை வைத்தார்

நம்பிக்கை வைத்தார்

அணியின் வெற்றிக்காக எதையும் செய்வேன் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்தார். அதனால் தான் எங்களது ஜோடி எப்பொழுதும் சிறப்பானது. நான் எப்பொழுதும் தோனியின் அறிவுரையை கேட்டு நடக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விளக்கம் தருவார்

விளக்கம் தருவார்

தோனி குறித்து யார்க்கர் மன்னன் பும்ரா கூறியதாவது: அணிக்குள் நுழையும் பொழுது தோனி தான் அப்போது கேப்டன். அது எனக்கு இலகுவாக இருந்தது. எந்த சந்தேகம் என்றாலும் அமைதியாக விளக்கம் அளிப்பார் என்றார்.

குறையும் ரன் ரேட்

குறையும் ரன் ரேட்

2019ம் ஆண்டு உலக கோப்பையில் தோனி பர்மான்ஸ் கொஞ்சம் கவலை அளிக்கும் விஷயம் என்றே கூறலாம். இதுவரை விளையாடியுள்ள 7 இன்னிங்ஸ்களில் 93 ஸ்டிரைக் ரேட் உடன் மொத்தம் 223 ரன்கள் தான் எடுத்து உள்ளார். உலகக் கோப்பையில் விளையாடும் இதர பேட்ஸ்மேன்களை விட ஸ்பின் பவுலிங்கில் தோனியின் ஸ்டிரைக் ரேட் மிக மோசம் என்பது பலருக்கும் தெரியாது.

Story first published: Saturday, July 6, 2019, 18:24 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+