Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 4 பேட்ஸ்மேன்.. 2 பேருக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்?.. இந்திய அணி தேர்வில் இவ்வளவு பிரச்சனையா?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆட உள்ள இந்திய அணியில் நிறைய பிரச்சனைகள் நிலவி வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் நாளை நடக்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளது. இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

நாளை நடக்கும் மூன்றாவது டெஸ்ட்டிற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், ரஹானே, புஜாரா, ஜடேஜா, பண்ட், விஹாரி, பும்ரா, சிராஜ், அஸ்வின், சைனி ஆகியோர் ஆட உள்ளனர்.

 சிக்கல்

சிக்கல்

இந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியில் 4 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ளனர். ரோஹித் சர்மா, சுப்மான் கில், ரஹானே, புஜாரா ஆகிய நான்கு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கூடுதலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பண்ட் உள்ளார்.

இரண்டு பேர்

இரண்டு பேர்

இது போக இரண்டு ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா, விஹாரி உள்ளனர். இதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது. அதேபோல் அணிக்குள் சைனி அறிமுகம் ஆகியுள்ளார்.

ஏன் உள்ளனர்

ஏன் உள்ளனர்

இந்திய அணியில் சைனி, விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் ஆடிய வரை சைனி அதிகமாக ரன் கொடுத்தாரே தவிர பெரிய அளவில் விக்கெட் எடுக்கவில்லை. அதேபோல் விஹாரி பவுலிங்கும் செய்வது இல்லை, பேட்டிங்கும் செய்வது இல்லை.

விஹாரி

விஹாரி

விஹாரிக்கு பதிலாக இந்திய அணியில் இன்னொரு பேட்ஸ்மேனை எடுத்து இருக்கலாம். அதேபோல் சைனி வருகையால் இந்திய அணியின் ஸ்பீட் பவுலிங் வலிமை இன்றி காணப்படுகிறது. அனுபவமற்ற வீரர்கள் இந்திய அணியின் ஸ்பீட் பவுலிங்கில் உள்ளனர்.

வலிமை இல்லை

வலிமை இல்லை

இதன் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் , ஸ்பீட் பவுலிங் இரண்டும் பெரிய அளவில் வலிமை இன்றி காணப்படுகிறது. பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் மீது இதனால் அழுத்தம் அதிகரிக்கும். அதேபோல் பெரிய அளவில் பயிற்சி இல்லாத ரோஹித்தை ஓப்பனிங் இறக்கும் ரிஸ்க்கையும் இந்திய அணி எடுப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 6, 2021, 13:47 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+