For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா,பாக் கிடையாது.. 2023ஆம் ஆண்டு டாப் 10 கிரிக்கெட் போட்டி? கூகுளில் மக்கள் அதிகம் தேடியது எது?

மும்பை : 2023 ஆம் ஆண்டில் பல மறக்க முடியாத கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. இதில் இந்திய மக்கள் கூகுளில் அதிக அளவு தேடிய 10 போட்டிகள் குறித்து தான் நாம் தற்போது பார்க்க போகிறோம். 2023 ஆம் ஆண்டு இந்திய அணி அதிக முறை ஆஸ்திரேலியா உடன் தான் மோதியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக icc இறுதிப்போட்டி என பல மறக்க முடியாத இந்தியா ஆஸ்திரேலியா போட்டிகள் நடப்பாண்டில் நடைபெற்றது.

Top 10 cricket matches in 2023 according to Google

அந்த வகையில் கூகுளில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தை தான் மக்கள் அதிக அளவு படித்திருக்கிறார்கள். இந்த பட்டியலில் அதான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதனை அடுத்து இரண்டாவதாக இந்தியா நியூசிலாந்து போட்டிகள் அமைந்திருக்கிறது. உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய நிலையில் இது குறித்து மக்கள் அதிகம் கூகுளில் தேடியிருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் இருக்கிறது. நான்காம் இடத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும், ஐந்தாவது இடத்தில் இந்தியாவும் அயர்லாந்தும் மோதிய ஆட்டங்கள் மக்களால் அதிகளவு தேடப்பட்டு இருக்கிறது. நடப்பாண்டில் இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் இது டாப் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

ஆறாவது இடத்தில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதிய போட்டிகள் குறித்து மக்கள் அதிக அளவில் தேடியிருக்கிறார்கள். ஏழாம் இடத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டியிருக்கிறது. இதில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்திருந்தார். இதேபோன்று எட்டாம் இடத்தில் இந்தியாவும் வங்கதேசம் அணிகள் மோதிய ஆட்டத்தை மக்கள் அதிக அளவு தேடி கூகுளில் படித்திருக்கிறார்கள்.

இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டமாக குஜராத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் இருக்கிறது. இதேபோன்று பத்தாவது இடத்தில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் மோதிய பரபரப்பான ஆட்டம் குறித்து மக்கள் அதிக அளவில் தேடி இருக்கிறார்கள். இந்த பட்டியலில் இந்தியா பாகிஸ்தான் போட்டி இடம்பெறாதது ரசிகர்கள் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

Story first published: Monday, December 11, 2023, 17:28 [IST]
Other articles published on Dec 11, 2023
English summary
Top 10 cricket matches in 2023 according to Google இந்தியா,பாக் கிடையாது.. 2023ஆம் ஆண்டு டாப் 10 கிரிக்கெட் போட்டி? கூகுளில் மக்கள் அதிகம் தேடியது எது?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+